கடலும், காதலும்! வியக்க வைக்கும் அமலா பாலின் முதல் வெட்டிங் டே செலிபிரேஷன்
Amala Paul Wedding Anniversary : நடிகை அமலா பால் தன்னுடைய முதல் திருமண நாளை கடல் நடுவே கொண்டாடியபோது எடுத்த போட்டோஸ் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Amala Paul wedding Anniversary Photos
மலையாள நடிகையான அமலா பால், பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மைனா படத்தின் வெற்றி அவரை அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டு சென்றது. குறிப்பாக விஜய்யுடன் தலைவா, சூர்யா உடன் பசங்க 2 என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவருக்கு குறுகிய காலத்திலேயே கிடைத்தது.
Amala Paul Wedding Day Celebration
ஹீரோயினாக உச்சத்தில் இருந்தபோதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார் அமலா பால். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை நான்கு ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
Amala Paul Romantic Celebration
விவாகரத்துக்கு பின்னர் சினிமாவிலும் அமலா பாலுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அவர் கடாவர் என்கிற படத்தை தயாரித்தார். ஆனால் அப்படமும் அவருக்கு கை கொடுக்காமல் போனதால், பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதையும் படியுங்கள்... 2வது திருமணம் செய்த நடிகைகளின் லிஸ்ட்; அட! இவரும் இருக்காரா?
Amala Paul and Jagat Desai
இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த அமலா பால், கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவர் மீது காதல் வயப்பட்டார். தன்னுடைய பிறந்தநாள் அன்று காதலனை அறிமுகப்படுத்திய அமலா பால், கடந்தாண்டு நவம்பர் 30ந் தேதி அவரை திருமணமும் செய்துகொண்டார்.
Amala Paul Romantic Dinner with her Husband
கொச்சியில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட அவர், கடந்த ஜூன் மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு இலை என பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்திருக்கிறார் அமலா பால்.
Amala Paul and Jagat Desai in Kumarakom
இந்நிலையில், தன்னுடைய முதலாவது திருமண நாளை கேரள மாநிலம் குமரகோமில் உள்ள போட் ஹவுஸில் கொண்டாடி இருக்கிறார். அப்போது அமலா பாலை தனியாக படகில் ஒரு இடத்துக்கு அழைத்து சென்ற அவரது கணவர், அங்கு கடலின் நடுவே சிவப்பு கம்பளம் விரித்த மேடையில் ஒரு ரொமாண்டிக் டின்னர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் இருவரும் ஜோடியாக அமர்ந்து சாப்பிட்டு, சரக்கடித்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கண்ணே பட்டுடும்... பார்க்க அப்படியே லட்டு போல் இருக்கும் அமலா பால் மகன்! வைரலாகும் போட்டோஸ்!