விவாகரத்து வதந்தி; ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்!
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த 5 மாதங்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்க்கு ஒரே நாளில் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Aishwarya Rai Dismiss Divorce Rumour
விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஒன்றாகக் இணைந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Aishwarya Rai and Abhishek Bachchan Photos
இந்தப் புகைப்படங்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற குடும்ப நண்பரின் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்டது. இதில் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது.
பாகுபலி முதல் KGF வரை எல்லாமே அவுட்! இரண்டே நாளில் வெறித்தன வசூல் வேட்டையாடிய 'புஷ்பா 2'!
Abhishek Bachchan and Aishwarya in Wedding Function
அபிஷேக் பச்சன் கருப்பு நிற பிளேசர் உடையில் இருக்க, ஐஸ்வர்யா கணவரின் உடைக்கு மேட்சிங்காக கருப்பு நிற சல்வார் அணிந்து அழகு தேவதையாக காணப்படுகிறார்.
Abhishek Bachchan and Aishwarya Selfie
ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் ஒன்றாகக் காட்சி அளிப்பது மட்டுமல்லாமல், செல்ஃபி எடுப்பதையும் காணலாம். நடிகை ஆயிஷா ஜுல்காவும் அவர்களுடன் இருக்கிறார்.
ஷாருக்கானையே மிஞ்சிய அல்லு அர்ஜுன்! பாலிவுட் பாக்ஸ் ஆபிசை பதம்பார்த்த புஷ்பா 2!
Aishwarya Rai Mother
ஒரு புகைப்படத்தில், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி, ஐஸ்வர்யாவின் அம்மா வ்ரிந்தா ராயுடன் மகிழ்ச்சியாக போஸ் கொடுப்பதை பார்க்க முடிகிறது.
Broke up the Divorce Rumor
இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தனித்தனியாக வந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, இவர்களின் விவாகரத்து குறித்து பல செய்திகள் பரவியது. ஆனால் இதனை அபிஷேக் பச்சன் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், ஒரே நாளில் தங்களுடைய விவாகரத்து சர்ச்சைக்கு இந்த திருமண நிகழ்ச்சி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த பாலிவுட் நட்சத்திர ஜோடி.
சன் டிவிக்கு தாவிய 4 மாதத்தில் கார் வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை!