இடுப்பழகை காட்டியபடி மொட்டைமாடியில் போட்டோஷூட்... ரம்யா பாண்டியனை காப்பியடித்த பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா
ரம்யா பாண்டியனைப் போல் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா நடத்தியுள்ள மொட்டைமாடி போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் ஒரே நாளில் இணையத்தில் பேமஸ் ஆனவர் ரம்யா பாண்டியன். அவரின் இந்த மொட்டைமாடி போட்டோஷூட் டிரெண்டை பல முன்னணி நடிகை பாலோ செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்திருந்த நடிகை சோபிதா துலிபாலாவும் மொட்டைமாடி போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
வெள்ளை நிற காட்டன் சேலையில் இடுப்பழகை காட்டியபடி விதவிதமாக போஸ் கொடுத்து நடிகை சோபிதா துலிபாலா நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.
சோபிதாவின் போட்டோஷூட்டை பார்த்த நெட்டிசன்கள், என்ன அப்படியே ரம்யா பாண்டியனின் மொட்டைமாடி போட்டோஷூட்டை காப்பியடித்து இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... டைட்டான ஒயிட் டிரெஸ்ஸில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்
சிலரோ அவர் சேலையில் செம்ம அழகாக இருப்பதாக குறிப்பிட்டு அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த கமெண்ட்டுகளுக்கும் லைக்குகள் குவிகின்றன.
நடிகை சோபிதா துலிபாலாவின் மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இதுபோன்று தொடர்ந்து கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துமாறு வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.
நடிகை சோபிதா துலிபாலா மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதியாக நடித்த பின்னர், அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் நடிகை சோபிதா துலிபாலா டேட்டிங் சென்றதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா, உட்பட 7 டாப் ஹீரோயின்ஸ் பயந்து நடுங்கும் விஷயங்கள்!