பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் மாவீரன்... அடேங்கப்பா! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள மாவீரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறதாம்.
ரஜினி நடிப்பில் ஏற்கனவே ஒரு மாவீரன் என்கிற திரைப்படம் உள்ள நிலையில், தற்போது அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்துள்ளார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சமூக கருத்துடன் கூடிய பேண்டஸி திரைப்படமாக உருவாகி உள்ள இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கார்டூனிஸ்ட் ஆக நடித்து இருக்கிறார்.
மாவீரன் படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல் நடிகை சரிதா இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இதுதவிர நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இப்படத்தில் கலக்கி இருக்கிறார். அவரது காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது, படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இதனால் மாமன்னன் திரைப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... ஆபாச பட உலகை விட்டு நான் விலகிட்டேன்... ஆனா நீங்க விலகல! வம்பிழுத்த நடிகை ரோஜாவை வச்சு செய்த சன்னி லியோன்
மாமன்னன் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. அதிகப்படியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7 கோடிக்கு மேல் வசூலித்திருந்த இப்படம் உலகளவில் ரூ.11 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருந்தது. விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக சிறந்த ஓப்பனிங்கை இப்படம் கொடுத்தது.
இந்நிலையில், மாவீரன் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளை விட இரண்டாம் நாளில் இப்படத்தின் கலெக்ஷன் அதிகரித்துள்ளது. இரண்டாம் நாளில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது மாவீரன். இன்றும் விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த டான், டாக்டர் போன்ற படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், அந்த லிஸ்ட்டில் மாவீரனும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கொரியன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து.. மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட கிரிஞ் படம் - மாவீரனை விளாசிய ப்ளூ சட்டை