MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • கொரியன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து.. மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட கிரிஞ் படம் - மாவீரனை விளாசிய ப்ளூ சட்டை

கொரியன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து.. மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட கிரிஞ் படம் - மாவீரனை விளாசிய ப்ளூ சட்டை

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் கொரியன் படத்தின் காப்பி என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 16 2023, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மாவீரன். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்டாக நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, சரிதா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி டல் அடிப்பதாகவும் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பேமிலி ஆடியன்ஸை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக மாவீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி முதல் நாளில் மட்டும் இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

இதையும் படியுங்கள்... யோகி பாபுவை கலாய்த்த தல தோனி.. 'LGM' படத்தின் விழாவில் நடந்த சம்பவம்.. க்யூட் வீடியோ..

34

திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் மாவீரன் திரைப்படம் கொரியன் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சாடியுள்ளார். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு வெளிவந்த ஹிட்மேன் ஏஜண்ட் ஜுன் என்கிற கொரியன் படத்தை காப்பி அடித்து தான் மாவீரன் படத்தை எடுத்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த படத்தின் கதையை எடுத்து அதில் சில கதாபாத்திரங்களை மாற்றி தேவையான அளவு மசாலா சேர்த்து எடுத்தால் உடனடி கிரிஞ் ரெசிபி ரெடி என பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை.

44

மாவீரன் படத்தில் சண்டைனாலே பயந்து நடுங்கும் சிவகார்த்திகேயன் ஒரு குரல் கேட்டதும் மாவீரனாக மாறி எதிரிகளை அடித்து துவம்சம் செய்வார். விஜய் சேதுபதி தான் இதற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த கான்செப்டை கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த ஸ்ட்ரேஞ்சர் தென் பிக்‌ஷன் என்கிற ஆங்கில படத்தில் இருந்து திருடி எடுத்துள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் சாடியுள்ளார். இவர் இப்படி அடுக்கடுக்கான பதிவுகளை போட்டாலும், மாவீரன் படக்குழு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உள்ளது.

இதையும் படியுங்கள்... 9 வருடங்களுக்கு பின் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved