ரூ.100 கோடி வசூலித்ததா சிவகார்த்திகேயன் படம்? மாவீரன் படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், சுனில், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இப்படத்துக்கு வித்து அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்ட் ஆக நடித்திருந்தார். இப்படத்திற்காக விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்தார். அவரது குரலும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருந்தது. இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது. மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது முதலே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
இதையும் படியுங்கள்... சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் இருவர் பலி
அதன்படி ரிலீஸான நான்கே நாட்களில் உலகளவில் ரூ.50 கோடி வசூலை அள்ளிய இத்திரைப்படம், 2-ம் வாரம் முடிவில் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் வார முடிவில் இப்படம் ரூ.73 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ.46 கோடி வசூலித்துள்ள இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை ரூ.4.9 கோடி வசூலித்துள்ளதாம்.
இதனால் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையுமா என்பது கேள்விக்குறி ஆகி உள்ளது. கடந்த வாரம் பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களே ரிலீஸ் ஆனதால் மாவீரன் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் வருகிற ஜூலை 28-ந் தேதி சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரித்த எல்.ஜி.எம், பரத்தின் லவ் போன்ற படங்கள் திரைக்கு வர உள்ளதால், மாவீரன் ரூ.100 கோடி வசூலை எட்டுவது சற்று கடினம் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சுனாமி, கொரோனாலாம் வரும்னு ஏன் யாரும் முன்கூட்டியே சொல்லல? ஜோதிடர்களை கதிகலங்க வைத்த எதிர்நீச்சல் மாரிமுத்து