Asianet News TamilAsianet News Tamil

சுனாமி, கொரோனாலாம் வரும்னு ஏன் யாரும் முன்கூட்டியே சொல்லல? ஜோதிடர்களை கதிகலங்க வைத்த எதிர்நீச்சல் மாரிமுத்து

விவாத நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து, ஜோதிடர்களை வெளுத்துவாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

Ethirneechal marimuthu slams astrologers in tamizha tamizha show
Author
First Published Jul 24, 2023, 8:39 AM IST

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக கலக்கிக் கொண்டிருப்பவர் மாரிமுத்து. இந்த சீரியல் மூலம் உலகளவில் உள்ள தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் மாரிமுத்து. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இவர் பேசிய வசனங்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளனர். சீரியலில் மனதில் பட்டதை பட்டென பேசிவிடும் ஒரு கதாபாத்திரம் தான் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் ரியல் லைஃபிலும் மாரிமுத்து இருப்பார் என்பதற்கு சான்றாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

ஜீ தமிழில் தமிழா தமிழா என்கிற விவாத நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கருபழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சியை தற்போது ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஜோதிடர்களும், ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. இதில் ஜோதிடத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என சிறப்பு விருந்தினராக வந்திருந்த மாரிமுத்து பேச வந்தார்.

இதையும் படியுங்கள்... ரஜினிக்கு புடிச்ச சீரியல்... எதிர்நீச்சல் பார்த்துட்டு சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார்? - மனம்திறந்த திருச்செல்வம்

அவர் பேசிய பேச்சு தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது. அப்படி என்ன பேசினார் என்பதை பார்க்கலாம், “ஜோசியம் பார்ப்பவர்களையும், ஜாதகம் பார்ப்பவர்களையும் மன்னிக்கவே கூடாது. மன்னிக்க முடியாத குற்றவாளிகள் அவர்கள் மட்டும் தான். நம் இந்தியா இந்த அளவுக்கு பின் தங்கி இருப்பதற்கு காரணம் ஜோசியர்கள் மட்டும் தான் என மாரிமுத்து சொன்னதை கேட்டு கடுப்பான ஜோதிடர் ஒருவர், ஜோதிடம் சொல்பவர்கள் வழிகாட்டிகள் என சொல்ல, இதற்கு தரமான பதிலடி கொடுத்தார் மாரிமுத்து.

தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆகமாட்டார், அந்த பாக்கியம் அவருக்கு இல்லைனு இந்தியாவுல இருக்க அத்தனை ஜோசியரும் சொன்னார்கள். இன்னைக்கு அவர் முதல்வர் ஆகிவிட்டார், மூஞ்ச கொண்டு போய் எங்க வச்சிப்பீங்க. அதேமாதிரி எந்த ஜோசியனாவது 2004-ல சுனாமி வரும்னு சொன்னானா, எந்த ஜோசியனாவது 2015-ல சென்னை வெள்ளத்துல முங்கும்னு சொன்னானா, எந்த ஜோசியனாவது 2020-ல கொரோனா வரும்னு சொன்னானா. வந்ததுக்கு அப்புறம் 1008 சொல்லுவாங்க. இவங்களையெல்லாம் மன்னிக்கவே முடியாது.

ரஜினிகாந்த் பிறந்த அதே நாள்ல, அதே நிமிஷத்துல அதே செகண்ட்ல இந்தியாவுல மட்டும் 57 ஆயிரம் குழந்தை பிறந்திருக்கு, ரஜினிகாந்த் மட்டும் எப்படி சூப்பர்ஸ்டார் ஆனாரு, மத்தவங்க ஏன் ஆகல என மாரிமுத்து கேட்டதும் அங்கிருந்த ஜோதிடர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள். இப்படி ரியல் லைஃபிலும் குணசேகரனாக மாறி ஜோதிடர்களை மாரிமுத்து வெளுத்து வாங்கிய வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... என்னது குணசேகரனின் மனைவி ஈஸ்வரி தான் ஜீவானந்தத்தின் லவ்வரா? எதிர்நீச்சல் சீரியலில் மிகப்பெரிய டுவிஸ்ட்

Follow Us:
Download App:
  • android
  • ios