டீலில் விட்டாரா ரஜினிகாந்த்? மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்த இயக்குனர்.. பரபர தகவல்!
சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரை ரஜினி டீலில் விட்டு விட்டதால்... வேறு ஒரு நடிகரை இயக்க சிபி சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில், எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலிங் ரஜினிகாந்த் நடிக்கிறார். சமீபத்தில் இவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் மொய்தீன் கான் என்பதையும் லால் சலாம் படக்குழு அறிவித்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ஒரு சில விவாதங்களுக்கு ஆளான நிலையில், நேற்றைய தினம் ரஜினிகாந்த் மும்பையில் நடக்கும் இப்படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
சர்ப்ரைஸ்... விஜய் - வெங்கட் பிரபு இணையும் ‘தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
மேலும் மும்பையில் நடந்த படப்பிடிப்பில், பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் கபில் தேவுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதுகுறித்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.
இந்த படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த தன்னுடைய அடுத்த படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி, லோகேஷ் கனகராஜ், என ரஜினிகாந்தை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்டும் நீண்டு கொண்டே உள்ளது.
குறிப்பாக சிபி சக்கரவர்த்தி, ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில்... தற்போது அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் உருவான 'டான்' திரைப்படம், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி, வசூலிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறையாக சிபி - சிவா இணைய உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு , அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்பை துவங்கி, இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் வெளியாகியுள்ளதால்... ரஜினி சிபி சக்ரவர்த்தியை டீலில் விட்டாரா? என்கிற பேச்சு அடிபட்டு வருகிறது.