சர்ப்ரைஸ்... விஜய் - வெங்கட் பிரபு இணையும் ‘தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
லியோ படத்துக்கு பின்னர் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தினை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைப் செவன் ஸ்கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. லியோ திரைப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
லியோ படம் ரிலீசாகும் முன்பே விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து லீக்கான வண்ணம் இருந்தது. இந்நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்றும் அப்படத்தை விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... அட்ராசக்க... உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
அதுமட்டுமின்றி இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளனர். யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார். அதன்பின்னர் சுமார் 22 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 25-வது படம் தான் தளபதி 68 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் அறிவிப்பை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டு உள்ளனர். அதில் பசில் மூலம் ஒவ்வொருவரின் பெயரையும் பேனா வைத்து குறிப்பிடும் படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இப்படத்திற்கான படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... பீரியட்ஸ் டைம்ல கூட.. 24 மணிநேரமும் செக்ஸ்; ‘நானும் மனுஷன் தான’ சம்யுக்தாவின் புகாருக்கு விஷ்ணுகாந்த் விளக்கம்