கருப்பு தாவணியில் கண்ணை கட்டும் அழகில் ரம்யா பாண்டியன்! முந்தானையை பறக்க விட்டு மூச்சு முட்ட வைத்த போட்டோஸ்!
நடிகை ரம்யா பாண்டியனின், தற்போது கருப்பு நிற தாவணியில்... கண்ணை கவரும் அழகு தேவதையாக மாறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஒரு கலக்கு கலக்கியதால்... ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது மட்டும் இன்றி, பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் ரம்யா பாண்டியன்.
இதை தொடர்ந்து, இவரின் அடுத்த டார்கெட் என்றால்... முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது தான். இதற்கான முயற்சியில் ஏற்கனவே ரம்யா வெற்றிபெற்று விட்டார் என்று தான் கூறவேண்டும். கடந்த ஆண்டு இவர், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடியாக... நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் தமிழில் இவரின் ஆசை இதுவரை நிறைவேறவில்லை. தன்னுடைய கனவை நிறைவேற்ற... போட்டோ ஷூட்டை கையில் எடுத்துள்ள ரம்யா, அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதத்தில், விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவருடைய போட்டோசை பார்ப்பதற்கு என்றே... ரம்யா பாண்டியனை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
'மாடர்ன் லவ் சென்னை' தொடரில் ஷோபாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த... நடிகை ஸ்ரீ கௌரி பிரியா போட்டோஸ்!
இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் கருப்பு நிற, தாவணியில்... கங்களை கவரும் அழகில் தாவணியை பறக்க விட்டு, விதவிதமாக எடுத்து கொண்டுள்ள போட்டோஸ், வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.