- Home
- Cinema
- ரூ.100 கோடி வசூலுக்கு போராடும் சிவகார்த்திகேயனின் மதராஸி – தமிழ்நாட்டில் எத்தனை கோடி வசூல்?
ரூ.100 கோடி வசூலுக்கு போராடும் சிவகார்த்திகேயனின் மதராஸி – தமிழ்நாட்டில் எத்தனை கோடி வசூல்?
சிவகார்த்திகேயனின் மதராஸி படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் குவித்துள்ளது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்து தெரிந்து கொள்ளலாம்.

சிவகார்த்திகேயனின் மதராஸி – தமிழ்நாட்டில் எத்தனை கோடி வசூல்?
சிவகார்த்திகேயனுக்கு அமரன் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் மதராஸி. அதுவும் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியானது. இதற்கு முன்னதாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித்தின் தீனா, தளபதி விஜய்யின் துப்பாக்கி மற்றும் கத்தி, விஜயகாந்தின் ரமணா ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. அதே போன்று நம்மளும் ஹிட் கொடுத்திடுவோம். அதுவும் ஹிட் இயக்குநர் முருகதாஸ் படம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
தனது வருங்கால கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்? ஆசையை வெளிப்படுத்திய தமன்னா!
மதராஸி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ஆனால், படம் வெளியானது முதலே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சொதப்பத் தொடங்கிவிட்டது. விமர்சனமும் பெரியதாக ஒன்றும் இல்லை. மதராஸி படம் வெளியான முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.13.65 கோடி வசூல் குவித்தது. 2ஆவது நாளில் ரூ.12.1 கோடியும், 3ஆவது நாளில் ரூ.10.65 கோடியும் வசூல் குவித்தது. ஒட்டுமொத்தமாக தற்போது வரையில் உலகளவில் ரூ.88 கோடி வசூல் குவித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்த அமரன் படம் 3 நாட்களில் மட்டும் ரூ.104.50 கோடி வசூல் குவித்தது. படம் வெளியாகி 9 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.88 கோடி வசூல் குவித்துள்ளது. ஆனால், மதராஸி அதில் பாதிதான் வசூல் குவித்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது.
இதே போன்று இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த ரஜினி முருகன், அமரன், டான், டாக்டர், மாவீரன், அயலான் ஆகிய படங்கல் தமிழகத்தில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் (ரகு) ஒரு காதல் தோல்வி நபராகவும், பிஜீ மேனன் ஒரு அரசாங்க அதிகாரியாக (என்எ) நடித்துள்ளனர். இந்த இருவரும் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.அது பிஜீ மேனன் ஒரு இடத்தில் சில கன்டெய்னர் டிரக்குகளை பிடிக்க முயல்கிறார்.
வாழ்க்கை துணை என்று அழைப்பார்கள். பிறகு... மாதம்பட்டி முத்தமிடும் படங்களை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!
மதராஸி ஓடிடி ரிலீஸ்
அதில் சில கன்டெய்னர்களை பிடிக்கவும் செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் அங்கே ஏற்பட்ட தகராறில் பிஜீ மேனனுக்கு அடிபட்டு விடுகிறது. அதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஒரு புறம் இவ்வாறு செல்ல மறுபுறம் திரைக்கலங்கள் என்றாலே காமெடி, ஆக்ஷன், என அனைத்து கதாபாத்திரங்களையும் அசால்டாக செய்யும் சிவாகார்த்திகேயனை காதல் தோல்வியால் தற்கொலை செய்யும் நபராக காட்டுகின்றனர்.
ரூ.10 லட்சம் செலவுன்னு வாங்கிட்டு குடும்பத்த அவமானப்படுத்திட்டு திரும்ப வந்த பாண்டியனின் அக்கா!
சிவா தன் காதலி ருக்மணி (மாலதி) பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்ய முயன்று, பிஜீ மேனன் இருந்த அதே மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இந்த இடத்தில் பிஜீ சிவாவை தன் வேலைக்கு பயன்படுத்த நினைக்கிறார். இந்த இடத்தில் இருந்து சிவாவும், அரசு அதிகாரியாக இருந்த பிஜீவும் சேர்ந்து என்ன செய்வார்கள் என்பதும், மற்றும் அந்த கன்டெய்னர்களில் என்ன உள்ளது என்பதும், சிவா எதனால் இந்த நிலைமையில் இருக்கிறார் என்பதே மீதி கதைக்களமாக ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன், அப்பாஸ், ரகு டகுபதி, தேவ் ராம்நாத், பிரித்வி ராஜன், பாப்ரி கோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.