- Home
- Cinema
- வாழ்க்கை துணை என்று அழைப்பார்கள். பிறகு... மாதம்பட்டி முத்தமிடும் படங்களை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!
வாழ்க்கை துணை என்று அழைப்பார்கள். பிறகு... மாதம்பட்டி முத்தமிடும் படங்களை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது காதலித்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தற்போது, இருவரும் நெருக்கமாக இருக்கும் புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இவர், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தன்னை கர்ப்பமாக்கிய பின்னர் ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்பது தெரியவந்துள்ளது. இதனால், அவர் ஜாயை இரண்டாவது திருமணம் செய்தது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
வைரல் ஆகும் அந்தரங்க போட்டோஸ்
இந்த விவகாரம் தொடர்பாக, ஜாய் கிரிசில்டா தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். தனது திருமண புகைப்படங்களையும், தனிப்பட்ட வீடியோக்களையும் அவர் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று புதிதாக ரங்கராஜுடன் நெருக்கமாக இருக்கும் சில படங்களை ஜாய் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "'வாழ்க்கை துணை' என்று அழைப்பார்கள்... பிறகு..." என்று ஒரு சிரிப்பு எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட இரண்டு படங்களில் இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஏற்கனவே நடந்த திருமணத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து, "'கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய். இதுதானா உன் அன்பு அறிமுகம்...???" என்றும் உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
‘வாழ்க்கை துணை’ என்று அழைப்பார்கள்…
பிறகு….. 😂@MadhampattyRR#madhampattyrangaraj#chefmadhampattyrangaraj#rangarajpic.twitter.com/eGhaZYAd8n— Joy Crizildaa (@joy_stylist) September 14, 2025
காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையரகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார். மேலும், பல யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.
இதற்கு பதிலடியாக, மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். தனது கேட்டரிங் நிறுவனத்திற்கு எதிராக ஜாய் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, ஜாய் கிரிசில்டா இது போன்ற அவதூறுகளை வெளியிடுவதை தடுக்க நீதிமன்றம் தலையிட வேண்டும் என ரங்கராஜ் தரப்பு கோரியுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், செப்டம்பர் 16-க்குள் பதிலளிக்குமாறு ஜாய் கிரிசில்டாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.