பிரபல நடிகையுடன் பள்ளிவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்திகேயன்..!ஏன்..?
நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளிவிழா ஒன்றில் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தியது மட்டும் இன்றி, வந்ததுமே மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு நெகிழ வைத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் மிகவும் பரபரப்பாக பட வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், குடும்பம், ரசிகர்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், மைதிரி-எனும் நட்பு திருவிழா நிகழ்ச்சி செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்திகேயன், மற்றும் நடிகை யாஷிகா ஆகியோர் கலந்துகொண்டார்.
மேலும் செய்திகள்: வீட்டில் வேலைசெய்யும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்! வைரலாகும் புகைப்படம்..!
இவர்கள் இருவருக்குமே மாணவர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தனர். சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக வந்ததால், குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
எனவே வந்ததுமே மிகவும் அன்பாக மாணவர்கள் அனைவரிடமும், தாமதமாக வந்ததற்காக முதலில் மன்னிப்பு கேட்டார். போக்குவரத்து நெரிசல்காரனமாக தாமதமாகிவிட்டது என்று காரணமும் கூறினார்.
மேலும் செய்திகள்: அத்துமீறி கண்ணம்மாவை அடைய நினைக்கும் தீவிரவாதி..! அநீதியை கண்டு ஆர்ப்பரித்த பரபரப்பு தருணம்..! புரோமோ
இதை தொடர்ந்து பேசிய அவர் காலை முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மிகவும் சோர்வாக வந்தேன். உங்களை பார்த்த பின்னர் புது எனர்ஜி வந்து விட்டது என தெரிவித்தார்.
மேடையில் பேசிய பின்னர் மாணவர்களை திருப்திபடுத்த, மேடையில் இருந்தபடி தன் மொபைலில் செல்பி எடுத்து அசத்தினார். மாணவர்களும் சிவகார்த்திகேயன் மற்றும் யாஷிகாவை பார்த்து உற்சாகம் அடைந்தது மட்டும் இன்றி, அன்பை பொழிந்தனர். மேலும் சிவகார்த்திகேயன், உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் என பேசினார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: பிகினி பேபியாக மாறிய ஸ்ரேயா... கடற்கரை மண்ணில் உருண்டு... பிரண்டு... குழந்தையுடன் கொண்டாடிய பிறந்தநாள்!