- Home
- Cinema
- வீட்டில் வேலைசெய்யும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்! வைரலாகும் புகைப்படம்..!
வீட்டில் வேலைசெய்யும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்! வைரலாகும் புகைப்படம்..!
சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், அதிகம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது. சினிமா விழாக்களில் மட்டுமே இவரை காணமுடியும். இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டில் பணியாற்றி வரும் பெண் ஒருவரின் வீட்டில் நடந்துள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
சீயான் விக்ரமை பொறுத்தவரை, ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளின் போது சென்னையில் இருந்தால் கலந்து கொள்ள தவறுவது இல்லை.
மேலும் செய்திகள்: அத்துமீறி கண்ணம்மாவை அடைய நினைக்கும் தீவிரவாதி..! அநீதியை கண்டு ஆர்ப்பரித்த பரபரப்பு தருணம்..! புரோமோ
இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது பையன் தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
இவர் திருமணத்தில் கலந்து கொண்டது மட்டும் இன்றி, தன்னுடைய கைகளால் தாலி எடுத்து கொடுள்ளார் விக்ரம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பிகினி பேபியாக மாறிய ஸ்ரேயா... கடற்கரை மண்ணில் உருண்டு... பிரண்டு... குழந்தையுடன் கொண்டாடிய பிறந்தநாள்!