அன்னை இல்லம் என்னோடது; ஜப்தி உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு மனு
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு மனுதாக்கல் செய்துள்ளார். அதன் பின்னணியை பார்க்கலாம்.

Prabhu Files Petition: Stop Confiscation of Sivaji's House! நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரு மகன்கள் உள்ளனர். இதில் ராம்குமாரின் மகனான துஷ்யந்த், நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரிப்பதற்காக தன்னுடைய மனைவி உடன் சேர்ந்து தனபாக்கியம் என்கிற நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அன்னை இல்லம் ஜப்தி செய்ய உத்தரவு
மேலும் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜி கணேசனுக்கு சொந்தமாக தி நகரில் உள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்றும் தனபாக்கியம் நிறுவனம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதுமான அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யாததால் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த ஜப்தி உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவின் தலைமைச் செயலகமாக இருந்த ‘அன்னை இல்லம்’! சிவாஜி வீட்டின் பிரம்மிக்க வைக்கும் வரலாறு!
பிரபு மேல் முறையீடு
அந்த மனுவில், என் தந்தை சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தபோதே அன்னை இல்லத்தை எனக்கு உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த வீடு எனக்கு சொந்தமானது. என் அண்ணன் ராம்குமார் சார்ந்த நிதிப் பிரச்சனையில் எனக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னை இல்லத்தின் பத்திரம் என் பெயரில் தான் உள்ளது. இந்த வீட்டில் என் சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை.
பிரபு பெயரில் அன்னை இல்லம்
அதனால் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை நீக்க வேண்டும் என பிரபு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தாஸ் முன்னிலையில் அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது நடிகர் பிரபுவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. அன்னை இல்லத்தை கோர்ட் ஜப்தி செய்ய உத்தரவிட்டதால் சிவாஜி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அதை எதிர்த்து நடிகர் பிரபு மேல் முறையீடு செய்துள்ளதால் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... பிரபுவின் பெயரில் வீடு இருக்கிறது – ஜப்தி உத்தரவை ரத்து செய்ய ராம்குமார் கோரிக்கை!