கேங்கர்ஸை போல் காமெடியில் கலக்கியதா சுமோ? விமர்சனம் இதோ
ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் சுமோ திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sumo Movie Twitter Review : அகில உலக சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிவா. இவர் சென்னை 28 படம் மூலம் அறிமுகமாகி தமிழ்படம், கலகலப்பு என தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் சுமோ. இப்படத்தை ஹோசிமின் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு போன்ற படங்களை இயக்கியவர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக வணக்கம் சென்னை படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
Sumo Movie
சுமோ விமர்சனம்
சுமோ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சுமோ வீரரான யோசினோரி டஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் சில காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது ஒரு வழியாக ஏப்ரல் 25ந் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளது படக்குழு. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்
இதையும் படியுங்கள்... அடுத்த Green Signal சிவாவிற்கு தான்.. படங்களை அடுக்கும் VFI - முடிவுக்கு வரும் SUMOவின் 4 வருட போராட்டம்!
Sumo Twitter Review
மோசமான படம் சுமோ
2025-ல் வெளியான மோசமான திரைப்படம் சுமோ தான். சிம்பிள் மூவில ஒரு சீன் கூட நல்லா இல்ல. அனைவரும் சுமாராக வேலை செய்துள்ளனர். ஓடிடில ஒரு தடவ கூட பாக்க முடியாத அளவுக்கு ஒரு படம் தான் இது. இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங் 10க்கு 1.5. இந்த மார்க் கூட ஹீரோயின் மற்றும் ஜப்பான் லொகேஷனுக்காக தான். மற்றபடி சுத்த வேஸ்ட் என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
Sumo Review
குழந்தைகளை கவரும்
மனதைத் தொடும் எமோஷன்களைக் கொண்ட ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்குப் படம் தான் இந்த சுமோ. சிவா மற்றும் சுமோவின் நகைச்சுவை மிகப்பெரிய வரவேற்பை பெறுகிறது. கதை வேகமாக நகர்ந்தாலும் சில இடங்களில் டல் அடிக்கிறது. ஆனால் சம்மருக்கு ஏற்ற படம் இது. குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி சுமோ படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எந்த அளவுக்கு வசூலிக்கிறது என்பதை பொறுத்து தான் இதன் வெற்றி... தோல்வி தீர்மானிக்கப்படும்.
இதையும் படியுங்கள்... ரெட்ரோ முதல் தக் லைஃப் வரை; சம்மர் ஸ்பெஷலாக கோலிவுட்டில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆகுதா?