- Home
- Cinema
- ரெட்ரோ முதல் தக் லைஃப் வரை; சம்மர் ஸ்பெஷலாக கோலிவுட்டில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆகுதா?
ரெட்ரோ முதல் தக் லைஃப் வரை; சம்மர் ஸ்பெஷலாக கோலிவுட்டில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆகுதா?
பள்ளிகளுக்கு கோடை காலத்தில் விடுமுறை விடப்படும் இதையொட்டி பல்வேறு புதுப்படங்களும் ரிலீஸ் ஆகும். அந்த வகையில், 2025-ம் ஆண்டு சம்மருக்கு என்னென்ன புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.

Tamil Movies Released for Summer 2025 : கோடை காலம் வந்தாலே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் அந்த காலகட்டத்தில் போட்டிபோட்டு புதுப்படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கும் கமல்ஹாசன், சூர்யா, சந்தானம், விஜய் சேதுபதி, சூரி என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி அடுத்த 5 வாரங்களுக்கு என்னென்ன புதுப்படங்கள் திரைக்கு வர உள்ளது என்பதை பார்க்கலாம்.
Gangers vs Sumo
கேங்கர்ஸ் vs சுமோ
ஏப்ரல் 24ந் தேதி சுந்தர் சி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள சுமோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் வடிவேலு, வாணி போஜன், கேத்தரின் தெரசா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்துக்கு போட்டியாக சிவா நடித்துள்ள சுமோ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 25-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
Retro vs Tourist Family
ரெட்ரோ vs டூரிஸ்ட் பேமிலி
வருகிற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக சிம்ரன் - சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படமும் மே 1ந் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படியுங்கள்... ரெட்ரோ பட ‘கன்னிமா’ பாடல்; டி.ஆரின் இந்த எவர்கிரீன் ஹிட் பாடலில் இருந்து உருவானதாம்!
Maaman vs DD Next Level
டிடி நெக்ஸ்ட் லெவல் vs மாமன்
மே மாதம் 16ந் தேதி சந்தானம் ஹீரோவாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும், சூரி ஹீரோவாக நடித்த மாமன் திரைப்படமும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. இதில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். அதேபோல் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார்.
Ace, Thug Life
ஏஸ் (Ace) மற்றும் தக் லைஃப்
மே மாதம் 23ந் தேதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த ஏஸ் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக வருகிற ஜூன் மாதம் 5ந் தேதி கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள தக் லைஃப் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கமல் எழுதிய ‘ஜிங்குச்சா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிம்பு - வைரலாகும் தக் லைஃப் பர்ஸ்ட் சிங்கிள்