சர்க்கரை நோயால் இடது காலை இழந்த லொள்ளு சபா காமெடி நடிகர் சிரிக்கோ உதயா!
Siriko Udhaya Who Lost his Left Leg : லொள்ளு சபா மூலம் பிரபலமான காமெடி நடிகர் சிரிக்கோ உதயா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இடது காலை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சர்க்கரை நோயால் இடது காலை இழந்த லொள்ளு சபா காமெடி நடிகர் சிரிக்கோ உதயா!
Siriko Udhaya Who Lost his Left Leg : லொள்ளு சபா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகர் சந்தானம். இன்று சினிமாவில் காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் மட்டுமின்றி மனோகர், சுவாமிநாதன், ஜீவா, யோகி பாபு, மாறன், ஜாங்கிரி மதுமிதா, பாலாஜி ஆகியோர் பலரும் பிரபலமானார்கள். இதில் சிலர் சினிமாவில் நடித்து கொண்டிருக்கின்ற்னர். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் நடித்தவர்களின் தான் சிரிக்கோ உதயா. இந்நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். அதுமட்டுமின்றி சினிமாவிலும் நடித்து வருகிறார். காமெடி ரோலிலும், குணச்சித்திர ரோலிலும் நடித்துள்ளார்.
சர்க்கரை நோயால் இடது காலை இழந்த லொள்ளு சபா காமெடி நடிகர் சிரிக்கோ உதயா!
பல படங்களுக்கு காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதி கொடுத்துள்ளார்ர். நடிகராக மட்டுமின்றி வயலின் கலைஞராகவும் சினிமாவில் ஜொலித்தவர். நடிகர் சந்திரபாபுவின் மகன். கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினிமாவில் காலூன்றி வருகிறார். இவர் எழுதிய ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
9 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த கவுண்டமணி; ஒத்த ஓட்டு முத்தையா வசூல் எவ்வளவு?
சர்க்கரை நோயால் இடது காலை இழந்த லொள்ளு சபா காமெடி நடிகர் சிரிக்கோ உதயா!
கனா காணும் காலங்கள் உள்ளிட்ட விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிரிக்கோ உதயா சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக இடது காலை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சொந்த ஊரையே மறந்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா: இப்படி சொல்லி மாட்டிக்கிட்டாங்களே!
சர்க்கரை நோயால் இடது காலை இழந்த லொள்ளு சபா காமெடி நடிகர் சிரிக்கோ உதயா!
கடந்த சில மாதங்களாக அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சர்ச்சரை நோய் தாக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக அவருக்கு இடது காலில் முட்டிக்கு கீழ் பகுதி முழுவதும் அறுவை சிகிச்சை மூலமாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அப்பா நன்றாக இருக்கிறார். விரைவில் வீட்டிற்கு செல்ல இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சிரிக்கோ உதயாவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் அகியோர் பலர் நேரில் சென்று சந்தித்து தேவையான உதவிகள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.