MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 9 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த கவுண்டமணி; ஒத்த ஓட்டு முத்தையா வசூல் எவ்வளவு?

9 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த கவுண்டமணி; ஒத்த ஓட்டு முத்தையா வசூல் எவ்வளவு?

Goundamani Starrer Otha Votu Muthaiya Box Office Collection : வாய்மை படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்த நிலையில் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா படம் வெளியாகி லட்சக்கணக்கில் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 16 2025, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Goundamani Starrer Otha Votu Muthaiya Box Office Collection : தமிழ் சினிமாவில் தனது காமெடி காட்சிகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் தான் கவுண்டமணி. 1977ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். கவுண்டமணிக்கு வயசு 85 ஆகும் நிலையில் இன்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு ஒரே சான்று அவரது நடிப்பில் வந்த ஒத்த ஓட்டு முத்தையா படம் தான். வாய்மை படம் வெளியாகி 9 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஒத்த ஓட்டு முத்தையா படம் வெளியாகியிருக்கிறது.

24

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் வசூல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கவுண்டமணி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

34

படத்தின் கதையின்படி தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுகிறார். இப்படி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் தான் அவரை அனைவரும் ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கின்றனர். தேர்தல் தோல்வியால் அடுத்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதில், வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் படத்தோட கதை. இதே போன்று குடும்த்தில் அண்ணன் தங்கை ரோலில் அவர் நடித்திருக்கிறார். குடும்பத்தில் அண்ணனாக இருக்கும் கவுண்டமணிக்கு 3 தங்கைகள். அவர்கள் மூவருக்கும் அவர் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

44

முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய கவுண்டமணி இந்த வயதிலும் கூட தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கவுண்டமணியின் அனுபவம், காமெடி டிரேடு மார்க் ஒத்த ஓட்டு முத்தையா படத்தை வெற்றியாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் படத்தோட வசூல் என்று பார்க்கும் போது ஒத்த ஓட்டு முத்தையா 2 நாட்களில் ரூ.40 லட்சம் வரையில் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிய பட்ஜெட் படம் என்பதால், அதிகாரப்பூர்வ வசூல் நிலவரங்கள் பற்றிய தகவல் இல்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
யோகி பாபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved