ஆண்ட்டி ரோல் சர்ச்சை; சிம்ரனிடம் மன்னிப்பு கேட்ட ‘டப்பா ரோல்' நடிகை
நடிகை சிம்ரன் தான் கூறிய 'டப்பா ரோல்' என்கிற சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

Simran Dabba Role controversy
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றியால் செம குஷியில் இருக்கிறார் நடிகை சிம்ரன். அதே நேரத்தில், சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய "டப்பா ரோல்" குறித்த தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். ஒரு புதிய பேட்டியில், JFW விருதுகளில் தான் ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான உரையைப் பற்றி நடிகை சிம்ரன் வெளிப்படையாகப் பேசி உள்ளார். சிம்ரனின் கருத்து 'டப்பா கார்டல்' தொடரில் நடித்த நடிகை ஜோதிகாவை குறிவைத்தா என்கிற ஊகங்களுக்கும் அவரே பதிலளித்தார்.
டப்பா ரோல் சர்ச்சைக்கு சிம்ரன் விளக்கம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 'ஆண்ட்டி' வேடங்களில் நடித்ததற்காக ஒரு சக நடிகை தன்னை கேலி செய்ததாகவும், 'டப்பா ரோல்' செய்வதை விட இது சிறந்தது என்றும் JFW விருதுகளில் சிம்ரன் கூறியிருந்தார். அவர் ‘டப்பா ரோல்’ என குறிப்பிட்டு இருந்ததால் நடிகை ஜோதிகாவை குறிவைத்தே இந்தக் கருத்தை சிம்ரன் தெரிவித்திருக்கலாம் என நெட்டிசன்கள் கணித்து வந்தனர். ஏனெனில் ஜோதிகா நடித்த ‘டப்பா கார்டல்’ என்கிற வெப் தொடர் அந்த சமயத்தில் வெளியாகி இருந்தது.
சிம்ரனிடம் மன்னிப்பு கேட்ட நடிகை
இதற்கு பதிலளித்த சிம்ரன், 'டப்பா கார்டல்' ஒரு நல்ல வெப் தொடர் என்றும், மக்கள் தனது முந்தைய கருத்துகளை தவறாகப் புரிந்துகொண்டதால் தான் இதுபோன்ற தவறான எண்ணங்கள் வருவதாகவும் கூறினார். நான் என்ன சொல்ல நினைத்தேனோ அது சம்பந்தப்பட்டவரை சென்றடைந்துவிட்டது. "ஆம், அந்தக் கருத்துக்குப் பிறகு எனக்கு அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில், 'மன்னிக்கவும், நான் உங்களை புண்படுத்த நினைக்கவில்லை' என்று எழுதப்பட்டிருந்தது," என்று சிம்ரன் கூறினார்.
சிம்ரனுக்கு டபுள் பிளாக்பஸ்டர்
சிம்ரனின் புதிய படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி' வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. மே 1 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், சூர்யாவின் 'ரெட்ரோ', நானியின் 'ஹிட் 3' ஆகிய படங்களுடன் போட்டியிட்ட போதிலும், 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்த ஆண்டு தமிழில் அதிக லாபம் ஈட்டிய படமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு சிம்ரனுக்கு தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளன. முன்னதாக அஜித்துடன் அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.