டப்பா ரோலைவிட ஆன்டி ரோல் எவ்வளவோ மேல் - பிரபல நடிகைக்கு சிம்ரன் கொடுத்த நெத்தியடி பதில்
ஆன்டி ரோலில் நடிப்பதை மட்டம் தட்டி பேசிய பிரபல நடிகைக்கு, டப்பா ரோலைவிட அது எவ்வளவோ மேல் என நடிகை சிம்ரன் பதிலடி கொடுத்துள்ளார்.

Simran angry Reply to Famous Actress : தமிழ் சினிமா ரசிகர்களால் இடுப்பழகி என கொண்டாடப்பட்டவர் சிம்ரன். இவர் விஐபி படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார். சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்துகொண்ட சிம்ரனுக்கு, அதன் பின்னர் சினிமாவில் மவுசு குறைந்தது. பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்ரன், தற்போது மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
Simran
சிறந்த வில்லிக்கான விருதை வென்ற Simran
அண்மையில் கூட நடிகை சிம்ரன், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் சிம்ரன், சில நாட்களுக்கு முன் JFW விருது விழாவில் கலந்துகொண்டார். அதில் அந்தகன் படத்தில் வில்லியாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருது வென்ற கையோடு, தன்னுடைய சக நடிகை ஒருவரின் மெசேஜ் தன்னை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை ஆதங்கத்துடன் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்...குட் பேட் அக்லி படத்துக்காக 25 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணையும் பிரபல ஹீரோயின்!
Simran Reply to Actress
நடிகையின் மெசேஜால் அப்செட் ஆன Simran
சமீபத்தில் சக நடிகை ஒருவரின் நடிப்பை பாராட்டி மெசேஜ் செய்திருக்கிறார் சிம்ரன். பதிலுக்கு அந்த நடிகை, ஆன்டி ரோலில் நடிப்பதைவிட இது எவ்வளவோ மேல் என ரிப்ளை செய்திருக்கிறார். அந்த நடிகையின் இந்த மெசேஜ், சிம்ரனை கடும் அப்செட் ஆக்கியதாம். அதற்கு எந்தவித ரிப்ளையும் தான் கொடுக்கவில்லை என கூறிய சிம்ரன், அந்த நடிகைக்கு மேடையில் பதிலடி கொடுத்தார். டப்பா ரோலில் நடிப்பதைவிட ஆன்டி கேரக்டரில் நடிப்பது எவ்வளவோ மேல் என சிம்ரன் கூறி இருந்தார்.
Actress Simran
Simran குறிப்பிட்ட அந்த நடிகை யார்?
நடிகை சிம்ரன் இப்படி ஆவேசமாக பதிலடி கொடுத்த அந்த நடிகை யார் என நெட்டிசன்கள் வலைவீசி தேடி வருகிறார். ஆனால் அவர் டப்பா கேரக்டர் என குறிப்பிட்டு சொன்னதால், அவர் அண்மையில் இந்தியில், ‘டப்பா கார்டெல்’ என்கிற வெப் தொடரில் நடித்த நடிகை ஜோதிகாவை தான் சொல்லி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சிம்ரனும், ஜோதிகாவும் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக கொடிகட்டிப் பறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஓட்டல் நடத்தி ஓஹோனு சம்பாதிக்கும் கோலிவுட் பிரபலங்கள் லிஸ்ட் இதோ