திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் உருவான படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார். இப்படத்தின் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இத்னானி நடித்திருந்தார். வழக்கமாக காதல் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் கவுதம் மேனன், இப்படத்தை அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக படமாக்கி இருந்தார்.
இப்படத்தில் முத்து என்கிற கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்பு எப்படி கேங்க்ஸ்டர் ஆகிறார் என்பதை காட்டி இருந்தனர். இப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து முத்து கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். இப்படத்திற்கு மற்றுமொரு பலமாக அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை.
இதையும் படியுங்கள்... நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு குழந்தைகள் மூலம் ஜாக்பாட் அடிக்கும்..! பிரபல ஜோதிடரின் துல்லிய கணிப்பு..!
அவரது இசையில் வெளியான பாடல்களும், பின்னணி இசையும் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக இதில் இடம்பெறும் மல்லிப்பூ என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான இப்படம் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் கவுதம் மேனனுக்கு பைக், நடிகர் சிம்புவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கார் ஆகியவற்றை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி, அதாவது நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சூர்யா - ஜோதிகா, விக்கி - நயன் போல் விரைவில் காதல் திருமணம் செய்யவுள்ள பிரபல நட்சத்திர ஜோடி