நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு குழந்தைகள் மூலம் ஜாக்பாட் அடிக்கும்..! பிரபல ஜோதிடரின் துல்லிய கணிப்பு..!
Nayanthara and Vignesh shivan Surrogacy Twin babies: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா கணிப்பின் படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு, இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.
நடிகை நயன்தார விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இருவருக்கு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதையடுத்து, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவன், பார்வதி, முருகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'வெல்கம் டு மை உயிர் உலகம் என்று' தெரிவித்திருந்தார்.
இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், 4 மாத்திற்குள் எப்படி குழந்தை பிறந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபுறம், திருமணத்திற்கு முன்பே நயன்தார விக்னேஷ் சிவன் தம்பதியினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பார்களோ..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் செய்தி காட்டு தீ போல் இணையத்தில் பரவ ஆரம்பித்தது. இந்த தம்பதியினருக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க....4 மாதத்தில் பெற்றோர்களான நயன்-விக்கி..திருமணம் முதல் இன்று வரை அழகிய தருணங்கள்
ஒரு புறம் மருத்துவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், 10 மாதங்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகள், மருத்துவ சான்றிதழ்கள் உள்ளிட்ட பல விதிகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். மேலும், திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அது சட்டப்படி குற்றமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த நிலையில், பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், குழந்தைகளின் பெயர்களின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது, உயிர் மற்றும் உலகம் தங்கள் பெற்றோரின் (நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்) வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்றார்.
இதில் உயிர் என்றால், தன்னுடைய வசீகரத்தால் எளிதில் உலகை தன் வசப்படுத்தக் கூடியவர் என்று அர்த்தமாம். மேலும், இனிமையான மற்றும் ஆடம்பரமான முறையில் வாழ்பவர் என்றும் கூறியுள்ளார். அதே போல், உலகம் என்றால் சுசுறுசுறுப்பு, ஆற்றல் மிக்கவர், தைரியமானவர் மற்றும் ஆர்வமுள்ளவர் என்றார். மேலும், இருவரும் எந்தச் சூழலையும் எளிதில் கையாளும் திறன் பெற்றவர்கள் என்றும் ஜோதிடர் கணித்துள்ளார்.
மேலும் படிக்க....4 மாதத்தில் பெற்றோர்களான நயன்-விக்கி..திருமணம் முதல் இன்று வரை அழகிய தருணங்கள்