4 மாதத்தில் பெற்றோர்களான நயன்-விக்கி..திருமணம் முதல் இன்று வரை அழகிய தருணங்கள்
நயன்தாரா விக்னேஷ் சிவனின் த்ரோபேக் அழகான மறக்கமுடியாத படங்கள்...
நானே ரவுடிதான் என்னும் படத்தின் மூலம் வளர்ந்த காதலை தற்போது திருமண பந்தத்தில் கொண்டு சேர்த்து உள்ளனர்.
விக்னேஷ் சிவனின் ஹிட் படங்களில் முதல் இடம் பெற்றிருப்பது நானும் ரவுடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
Image: Vignesh Shivan/Instagram
முன்னதாக காதல் தோல்வியால் துவண்டு இருந்த நயன்தாராவிற்கு ஆறுதலையும் காதலையும் அள்ளிக் கொடுத்தார் விக்னேஷ் சிவன். 7 வருடங்கள் இருவரும் காதல் உறவில் இருந்தனர்.
அவ்வப்போது அரசல் புரசலாக காதல் கிசுகிசுக்களுடன் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதை அடுத்து இவர்களே பகிரகமாக தங்களது காதலை அறிவிக்கும் வண்ணம் ஒன்றாக கோவில் குளங்களுக்கு செல்வது என சுற்றித்திரிந்தனர்.
nayanthara, vignesh shivan
அதோடு வெளிநாட்டில் இவர்கள் இருவரும் ஒன்றாக வீடு எடுத்து லிவ்விங்க் டூ கேதரின் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
Vignesh Shivan and Nayanthara
தொடர்ந்து இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தனர். அதன் மூலம் பல நல்ல படங்களை தயாரித்து பாராட்டுகளை பெற்று வந்தன. இவர்கள் தயாரித்த கூழாங்கல் படம் இன்றளவும் வெற்றிகளை குவித்து வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் படம் உருவாகி இருந்தது. இதில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா இவர்களுடன் சமந்தா இணைந்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் வாரி குவித்தது. பின்னர் நன்றி சொல்ல திருப்பதி சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா அங்கேயே திருமண தேதியையும் முடிவு செய்து வந்துவிட்டனர்.
Image: Vignesh Shivan/Instagram
பின்னர் விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற நயன்தாரா அங்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்திருந்தார்.
இதை தொடர்ந்து மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட திருமணம் மேடையில் இருவருக்கும் மணம் முடிந்தது.
Nayanthara and Vignesh Shivan
இவர்களது மணநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷாருக்கான் மணிரத்தினம் என பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்தான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்..
பின்னர் தாய்லாந்து ஹனிமூன் சென்ற ஜோடிகளின் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வாழ்த்துக்களை பெற்றது.
சென்னை திரும்பி விக்னேஷ் சிவன் தனது வேலையில் பிஸியாக விட்டார். ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா , பட வேலைகள் என பிசியாக இருந்த விக்னேஷ் சிவன்.
பின்னர் இரண்டாவது ஹனி மூனுக்காக நயன்தாராவை அழைத்துக் கொண்டு ஸ்பெய்னுக்கு சென்றிருந்தார். அங்கு இருவரும் சுதந்திர தினம் கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களையும் மகிழ்வித்தது.
தற்போது சென்னை திரும்பி உள்ள நயன்தாரா தனது படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் முடிந்த இந்த ஜோடி திடீரென தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.
அதாவது நயன்தாரா விக்னேஷுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைக்கு பிறந்துள்ளது. இதுகுறித்த பதிவை வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நான்கே மாத திருமண பந்தத்தில் தாயும் - தந்தையுமான நயன்தாரா - விக்னேஷ் அவர்களை பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் வரை வாழ்த்தி மகிழ்கின்றனர்.