ரூ.100 கோடி பட்ஜெட்டில் கமல் தயாரிக்கும் படத்துக்காக.. ஆளே டோட்டலாக மாறிய சிம்பு - வைரலாகும் நியூலுக் போட்டோஸ்
கமல்ஹாசன் தயாரிக்கும் STR 48 படத்திற்காக தாய்லாந்தில் தங்கி 3 மாதங்களாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வந்த சிம்பு, தற்போது சென்னை திரும்பி உள்ளார்.
நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்த பின்னர் பழையபடி அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இதையடுத்து பத்து தல என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பத்து தல படத்தின் ரிலீசுக்கு பின்னர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் இப்படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக எஸ்.டி.ஆர்.48 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுள்ளார். இதற்காக கடந்த மூன்று மாதங்களாக தாய்லாந்தில் தங்கி அவர் பயிற்சி பெற்று வந்தார்.
இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2 ஷூட்டிங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற கங்கனா ரணாவத்... படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்
சிம்பு - தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க கமல் திட்டமிட்டு உள்ளாராம். தற்போது இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், எஸ்.டி.ஆர்.48 படத்திற்காக தாய்லாந்தில் தங்கி 3 மாதங்களாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வந்த சிம்பு, தற்போது சென்னை திரும்பி உள்ளார். பத்து தல படத்திற்காக நீண்ட தாடியுடன் காணப்பட்ட சிம்பு, தற்போது ஆளே டோட்டலாக மாறி புதிய லுக்கில் காட்சியளிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்துக்காக தான் சிம்பு இந்த புதிய தோற்றத்திற்கு மாறி உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட காளை படத்தில் பார்த்ததுபோல் இருப்பதாக ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Leo vs Jawan : விஜய்க்கே விபூதி அடிக்க பார்க்கும் அட்லீ... ஜவான் படத்தால் லியோவுக்கு வந்த புது சிக்கல்?