சந்திரமுகி 2 ஷூட்டிங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற கங்கனா ரணாவத்... படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்

சந்திரமுகி 2 படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது ராகவா லாரன்ஸ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் கங்கனா.

Kangana Ranaut wraps up her portion in Chandramukhi 2

பி.வாசு இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லட்சுமி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதால், அவர் ஷூட்டிங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் நடித்த காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதை அடுத்து, அவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி அவரை படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோவையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறோம் கங்கனா என இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார். அத்துடன் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது ராகவா லாரன்ஸ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் கங்கனா.

இதையும் படியுங்கள்... 'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா? செம்ம கியூட்டா இருக்காங்களே!

அவர் பதிவிட்டுள்ளதாவது : “சந்திரமுகி படப்பிடிப்பில் கடைசி நாள், நான் சந்தித்த அற்புத மனிதர்களை விட்டு பிரிவது மிகவும் கடினமாக உள்ளது. லாரன்ஸ் மாஸ்டர் ஒரு சைடு டான்சராக தனது கெரியரை தொடங்கினார். ஆனால் இன்று பிளாக்பஸ்டர் இயக்குனர், சூப்பர்ஸ்டார் மட்டுமின்றி அன்பான, பணிவான, அற்புதமான மனிதராக இருக்கிறார். உங்கள் பணிவுக்கும், நகைச்சுவைக்கும், நீங்கள் எனக்கு தந்த பிறந்தநாள் பரிசுக்கும் நன்றி சார். உங்களுடன் பணியாற்றியது அற்புதமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து ராகவா லாரன்ஸ் போட்டுள்ள டுவிட்டில், “உங்களது அன்பான வார்த்தைகளும் நன்றி. எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்கு வந்துள்ள உங்களின் கதை மிகவும் உத்வேகம் அளிக்கிறது. மும்பையில் 20 நாள் ஷூட்டிங் என்றதும் எனது வீட்டு சாப்பாடை மிகவும் மிஸ் பண்ணினேன். ஆனால் நீங்கள் தினமும் எனக்கு ருசியான உணவை தயார் செய்து கொடுத்தீர்கள். உங்களுடன் பணியாற்றியது எனக்கும் சிறந்த நேரமாக இருந்தது. அனைத்திற்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்... Leo vs Jawan : விஜய்க்கே விபூதி அடிக்க பார்க்கும் அட்லீ... ஜவான் படத்தால் லியோவுக்கு வந்த புது சிக்கல்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios