shruti Haasan : நீங்க வெர்ஜினா?... நெட்டிசனின் எடக்குமுடக்கான கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்
இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடிய போது நடிகை ஸ்ருதிஹாசனிடம் எடக்குமுடக்கான கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தன் தந்தையை போலவே சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அங்கு இவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பால கிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களிலும் ஸ்ருதி தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் சலார் திரைப்படம் தயாராகி வருகிறது. கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர தி அய் என்கிற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... ஒரே லவ் மூடில் இருக்கும் அனிகா..! சிவப்பு நிற ஹாட் உடையில்... ரோஜா பூவை போல் பளீச் வெளியிட்ட போட்டோஸ்!
தற்போது மும்பையில் வசித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு என்கிற டூடில் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும் தற்போது டேட்டிங் செய்து வருவதோடு, ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்தும் வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்தார். இந்த கலந்துரையாடலின் போது சில வில்லங்கமான கேள்விகளும் கேட்கப்பட்டன. அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி நெட்டிசன் ஒருவர் நீங்கள் வெர்ஜினா என கேள்வியெழுப்பினார். அந்த நபர் வெர்ஜின் என்பதை ஆங்கிலத்தில் தவறாக எழுதி இருந்ததை பார்த்த ஸ்ருதிஹாசன், முதலில் வெர்ஜின் என்பதன் ஸ்பெல்லிங்கை சரியாக தெரிந்துகொள்ளும்படி அந்த நபருக்கு தரமான பதிலடி கொடுத்தார். மற்றொருவரோ தான் உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாகவும், அது சாத்தியமா எனவும் கேட்டிருந்தார். இதற்கு சட்டென நோ சொல்லி அவரை வாயடைக்க செய்தார் ஸ்ருதி. அவரின் இந்த பதில்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஃபுட் பாலை காலில் வைத்துக்கொண்டு.. செம்ம ஸ்டைலிஷாக அப்பா அஜித் மற்றும் அம்மா ஷாலினியுடன் போஸ் கொடுத்த ஆத்விக்!