ஃபுட் பாலை காலில் வைத்துக்கொண்டு.. செம்ம ஸ்டைலிஷாக அப்பா அஜித் மற்றும் அம்மா ஷாலினியுடன் போஸ் கொடுத்த ஆத்விக்!
அஜித் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் செம்ம ஸ்டைலிஷாக ஃபுட் பால் ஸ்டேடியத்தில் போஸ் கொடுத்த புகைப்படங்களை ஷாலினி அஜித் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக உள்ளவர் அஜித். இவர் பற்றிய எந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியானாலும் அது அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான். அஜித் நவீன தொழில் நுட்பத்தில் கையாளுவதில் கில்லி என்றாலும், சமூக வலைத்தளங்களில் தலைகாட்டுவதை விரும்புவது இல்லை.
இவரின் காதல் மனைவியும், நடிகையுமான ஷாலினியும், எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லாமல் இருந்த நிலையில், திடீர் என கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து சில மாதங்களே ஆகும் நிலையில், இவரை பல ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
மேலும் அவ்வப்போது, தன்னுடைய கணவர் அஜித் மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்களுக்கும்... ஃபாலோவர்சுக்கும்... இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் ஷாலினி தற்போது, தன்னுடைய கணவர் அஜித் மிகவும் ஸ்டைலிஷான கெட்டப்பில்... மகன் மற்றும் தன்னுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஆத்விக் காலில் ஃபுட் பாலை வைத்து கொண்டு படு ஜோராக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. அதே போல் ஆத்விக்கை பார்த்து பலர், கண்டிப்பாக பெரிய ஃபுட் பால் பிளேயராக வருவார் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே சென்னை நேரு ஸ்டேடியத்தில், நடைபெற்ற ஃபுட் பால் மேட்சை தன்னுடைய அம்மா ஷாலினியுடன் ஆத்விக் காண வந்தபோது எடுத்த புகைப்படங்கள் படு வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூல் படிக்கும் போதே தனுஷ் அப்படி.? டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் கூறிய வேற லெவல் தகவல்!