ஸ்கூல் படிக்கும் போதே தனுஷ் அப்படி.? டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் கூறிய வேற லெவல் தகவல்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவி கலந்துகொள்ளும் நடன நிகழ்ச்சியில் நடுவராக ஒளிபரப்பாகி வரும் பாபா பாஸ்கர் தன்னுடைய பள்ளி நாட்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில்... இந்த வாரம் ஸ்கூல் சுற்று நடக்கிறது. போட்டியாளர்கள் அனைவருமே, பள்ளிமாணவர்கள் போல் உடை அணிந்து கலந்து கொண்டுள்ளதோடு, தங்களை பள்ளி பருவ நாட்கள் குறித்தும் பகிர்ந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
நடுவர்களின் ஒருவரான சங்கீதா தன்னுடைய ஸ்கூல் நாட்கள் குறித்து பகிர்ந்து கொண்ட போது... முதலாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்தேன் என்றும், அது மிகவும் கண்டிப்பான பள்ளி. எப்போதுமே நான் படிப்பில் டாப் ஸ்டுடென்ட். ஸ்கூல் பீப்பிள் லீடராகவும் இருந்துள்ளதாக கூறினார்.
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதி ராஜாவை கலங்க வைத்த மரணம்!
இவரை தொடர்ந்து மற்றொரு நடுவராக பாபா பாஸ்கர், மிகவும் காமெடியாக தன்னுடைய பள்ளி பருவ நாட்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். தனக்கு ஸ்கூல் டேஸில் பிடித்தது என்றால், ஸ்போர்ட்ஸ் டே மற்றும் ஆனுவல் டே தான்.
படிப்பை தவிர மற்ற அணைத்து விஷயங்களிலும் முன்னணியில் இருப்பேன். பள்ளியில் படிக்கும் போது, கோகோ, கிரிக்கெட், டான்ஸ், கபடி என அனைத்திலும் நான் தான் கேப்டன். நான் ஸ்போட்ஸ்ஸில் சிறப்பாக செயல்பட்டதால் தான் என்னை பள்ளியியேலேயே வைத்திருந்தார்கள்.
அதே போல் நான் பாஸ் பண்ண முக்கிய காரணம் நடிகர் தனுஷ். இருவரும் ஒரே கிளாஸ் தான். அவர் படிப்பில் டாப் ஸ்டுடென்ட். அவரை பார்த்து காப்பி அடித்து தான் நான் பாஸ் பண்ணுனேன். எனவே எக்ஸாம் வருகிறது என்றால், என்னை விட அவருக்கு தான் ஃபேண்டா, முட்டை பப்ஸ் போன்றவற்றை வாங்கி கொடுத்து கவனித்து கொள்வேன். பள்ளியில் மட்டும் அல்ல ஒரு நண்பனாக இப்போதும் என்னை வாழ வைத்து கொண்டு இருக்கிறார் தனுஷ் என உருக்கமாக பேசியுள்ளார் பாபா பாஸ்கர்.