MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Shruti Haasan: 'நான் கமல் பொண்ணு இல்ல, என் பேரு பூஜா!' - ஸ்ருதி ஹாசன் சொன்ன சீக்ரெட்!

Shruti Haasan: 'நான் கமல் பொண்ணு இல்ல, என் பேரு பூஜா!' - ஸ்ருதி ஹாசன் சொன்ன சீக்ரெட்!

Kamalhaasan Daughter Shruti Haasan : சென்னையில் எங்கு பார்த்தாலும் அப்பா கமல் ஹாசனின் புகழ். இதனால் சிறுவயதில் தனக்கென ஒரு அடையாளம் இல்லாமல் தவித்த ஸ்ருதி ஹாசன் ஒரு செம சம்பவம் பண்ணி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 21 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shruti Haasan childhood secret
Image Credit : X

Shruti Haasan childhood secret

சினிமாவுல 'உலக நாயகன்' கமல் ஹாசனோட ஆதிக்கம் பத்தி சொல்லவே தேவையில்லை. அப்படிப்பட்ட ஒருத்தரோட வீட்ல பொறந்தா, பிறக்கும்போதே செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் கிடைச்சுடும். ஆனா, உலகமே கமல் நடிப்பை கொண்டாடிட்டு இருந்தப்போ, அவரோட சொந்த மகள் ஸ்ருதி ஹாசன் மட்டும், "நான் இவங்க பொண்ணே இல்ல"னு பொய் சொல்லிட்டு திரிஞ்சிருக்காங்க! என்னடா இது, சினிமா ட்விஸ்ட் மாதிரி இருக்குனு நினைக்கிறீங்களா? அதன் பின்னணியை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
அப்பாவின் புகழுக்கு நடுவே தொலைந்துபோன ஸ்ருதி!
Image Credit : shrutzhaasan instagram

அப்பாவின் புகழுக்கு நடுவே தொலைந்துபோன ஸ்ருதி!

ஸ்ருதி ஹாசன் இன்னைக்கு ஒரு ஆல்-ரவுண்டர். நடிகை, பாடகி, மியூசிக் கம்போசர்னு எல்லாத்துலயும் தனக்கென ஒரு முத்திரை பதிச்சிருக்காங்க. ஆனா சின்ன வயசுல, 'கமல் ஹாசன் மகள்'ங்கிற அந்த அடையாளம் அவங்களுக்கு ஒரு பெரிய பாரமா இருந்துச்சாம். எங்க போனாலும், "ஏய் பாரு, இது கமல் ஹாசன் பொண்ணுல?"னு எல்லாரும் கை காட்டி பேசும்போது, குட்டி ஸ்ருதிக்கு ரொம்பவே சங்கடமா இருக்குமாம். "எனக்கும் ஒரு பேர் இருக்கு, நான் ஸ்ருதி"னு கத்தணும் போல தோணுமாம்.

Related Articles

Related image1
அந்த மனசு தான் கடவுள்... குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன் - குவியும் பாராட்டு
Related image2
கமல் - சரிகா விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் – என்ன காரணம் தெரியுமா?
35
கமல் மகளின் மாஸ்டர் பிளான்!
Image Credit : Instagram

கமல் மகளின் மாஸ்டர் பிளான்!

இப்படி அப்பாவோட பேர்ல இருந்து தப்பிக்க, ஸ்ருதி ஒரு ஐடியா பண்ணியிருக்காங்க. ஸ்கூல்லயோ இல்ல வெளியிலயோ யாராவது, "நீ கமல் ஹாசன் பொண்ணா?"னு கேட்டா, "ஐயையோ இல்லவே இல்ல, என் பேரு பூஜா ராமச்சந்திரன், என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன்"னு ரொம்ப கான்ஃபிடன்டா பொய் சொல்வாங்களாம்!

இதுல ட்விஸ்ட் என்னன்னா, இந்த ராமச்சந்திரன் வேற யாரும் இல்ல, ஸ்ருதியோட பல் வலிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டென்டிஸ்ட்! பாவம், அந்த டாக்டருக்கு, தான் ஸ்ருதி ஹாசனுக்கு அப்பாவா புரொமோஷன் வாங்குன விஷயமே தெரிஞ்சிருக்காது. தனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்க ஸ்ருதி பட்ட இந்த பாடு, இப்போ கேட்க காமெடியா இருந்தாலும், அப்போ அது அவங்களோட சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயமா இருந்துருக்கு.

45
மும்பைக்கு சென்ற ஸ்ருதி!
Image Credit : Instagram

மும்பைக்கு சென்ற ஸ்ருதி!

சென்னையோட மூலை முடுக்குல எல்லாம் அப்பா கமல் போஸ்டர்தான். அங்க ஸ்ருதியால சுதந்திரமா இருக்கவே முடியல. சாரிகாவும் கமல் ஹாசனும் பிரிஞ்ச சமயத்துல, ஸ்ருதி மும்பைக்கு ஷிஃப்ட் ஆனாங்க. "அங்கயாவது என்ன யாரும் கமல் பொண்ணுனு சொல்லி அடிக்கடி தொந்தரவு பண்ண மாட்டாங்க"னு நினைச்சுதான் போனாங்க. இப்படி கடினமா உழைச்சுதான், இன்னைக்கு சினிமாவுல தனக்கென ஒரு தனி இடத்தை பிடிச்சிருக்காங்க.

55
பெருமைப்படும் ஸ்ருதி
Image Credit : Instagram

பெருமைப்படும் ஸ்ருதி

அன்னைக்கு அப்பாவோட பேர்ல இருந்து ஓடி ஒளிஞ்ச ஸ்ருதி, இன்னைக்கு ரொம்பவே மாறியிருக்காங்க. "இப்போ கமல் ஹாசன் பெயர் இல்லாத ஒரு ஸ்ருதியை என்னால கற்பனை செஞ்சு கூட பார்க்க முடியாது"னு சொல்லி, அப்பா மேல இருக்குற மரியாதையை வெளிப்படுத்தியிருக்காங்க.

கமல் ஹாசன் மற்றும் நடிகை சாரிகாவோட அந்த பிடிவாத குணம் தான் பிள்ளைகளுக்கும் வந்திருக்கும் போல. அதனாலதான், எந்த பின்புல உதவியும் இல்லாம, ஸ்ருதி ஹாசன் இன்னைக்கு தனியாளா ஒரு 'ஹேண்ட்சம்' கெரியரை உருவாக்கியிருக்காங்க! மொத்தத்துல, அப்பாவோட புகழில் இருந்து தப்பிக்க 'பூஜா ராமச்சந்திரன்' ஆன ஸ்ருதி, இன்னைக்கு இந்தியா பெருமைப்படும் ஸ்டார் நடிகையா வளர்ந்து நிக்கிறாங்க.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Day 6 Box Office : 6ம் நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் சிக்ஸர் அடித்த கருப்பு... வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணம் நடந்ததா? ஆதி குணசேகரன் வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
அந்த மனசு தான் கடவுள்... குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன் - குவியும் பாராட்டு
Recommended image2
கமல் - சரிகா விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் – என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved