MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அந்த மனசு தான் கடவுள்... குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன் - குவியும் பாராட்டு

அந்த மனசு தான் கடவுள்... குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன் - குவியும் பாராட்டு

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவி இருக்கிறார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2026, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shruti Haasan Help For Kid Treatment
Image Credit : Instagram

Shruti Haasan Help For Kid Treatment

கடுமையான மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்து, ஸ்ருதி ஹாசன் மனிதநேயம் காட்டியுள்ளார். கமல் ஹாசனின் மகளான இவர், அரியவகை நோயால் அவதிப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்து அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஸ்ருதி ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அரிய நோய்க்கான சிகிச்சைக்கு உதவியதோடு, சிகிச்சைக்குப் பின் குழந்தையை நேரில் சந்தித்து கொஞ்சியுள்ளார் ஸ்ருதி.

24
குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய ஸ்ருதி
Image Credit : Instagram

குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய ஸ்ருதி

அவர் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை பெற்றோர் பகிர்ந்துள்ளனர். தங்கள் மகள் ஆளவியுடன் ஸ்ருதி விளையாடும் புகைப்படத்தைப் பகிர்ந்த பெற்றோர், 'அவரால்தான் எங்கள் மகள் இன்று உயிருடன் இருக்கிறாள்' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். ஸ்ருதியின் உதவியும், அவரின் நல்ல குணமும் தங்களை நெகிழ வைத்ததாக அப்பெற்றோர் கூறினர். அவர் செய்த இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

Related Articles

Related image1
பெங்காலி நடிகையை கரெக்ட் பண்ண கமல் செஞ்ச வேலையை பார்த்தீங்களா..! பல வருட சீக்ரெட்டை உடைத்த ஸ்ருதி
Related image2
கமல் - சரிகா விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் – என்ன காரணம் தெரியுமா?
34
அரியவகை நோய் பாதிப்பு
Image Credit : Instagram

அரியவகை நோய் பாதிப்பு

'அவர் எங்களை குடும்ப உறுப்பினர் போல வரவேற்றார். எங்கள் மகள் ஆளவியுடன் பொறுமையாகப் பழகியதை மறக்க முடியாது. அவரது எளிமையான செயலுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் மகளுக்கு MSMD என்ற அரிய நோய் இருப்பதையும், அக்குழந்தைக்கு செய்யப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பற்றியும் பெற்றோர் பதிவிட்டிருந்தனர். இதைக் கண்ட ஸ்ருதி ஹாசன் உதவ முன்வந்தார்.

44
தேவதையாக ஸ்ருதி வந்தார்
Image Credit : Instagram

தேவதையாக ஸ்ருதி வந்தார்

'கடவுள் அனுப்பிய தேவதையாக ஸ்ருதி வந்தார்' என பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். ஆளவி திடீரென ஐசியூவில் அனுமதிக்கப்பட்டபோது, ஸ்ருதியும் அவரது குழுவும் உதவினர். அவர்களால் எங்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைத்தது. உணர்ச்சி ரீதியாகவும், நிதி ரீதியாகவும் ஆதரவளித்தனர். அவர்களால்தான் என் மகள் இன்று உயிருடன் இருக்கிறாள்' என பெற்றோர் உருக்கமாகக் கூறியுள்ளனர். ஸ்ருதியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TRP ரேஸில் சரிந்த சன் டிவி... சம்பவம் பண்ணிய விஜய் டிவி - இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ
Recommended image2
மகன்களுக்கு மொட்டை போட்டு திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்...!
Recommended image3
தனுஷுடன் மோதும் ராம்சரண்... கிளாஷுக்கு ரெடியான கர vs பெத்தி..!
Related Stories
Recommended image1
பெங்காலி நடிகையை கரெக்ட் பண்ண கமல் செஞ்ச வேலையை பார்த்தீங்களா..! பல வருட சீக்ரெட்டை உடைத்த ஸ்ருதி
Recommended image2
கமல் - சரிகா விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் – என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved