கோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு... ரோட்டில் இருந்தே தரிசனம் செய்ய வற்புறுத்தியதாக புகார்
கேரள மாநிலத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள நடிகையான அமலா பால், தமிழில் சிந்து சமவெளி, மைனா, தலைவா, தெய்வத் திருமகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். டாப் ஹீரோயினாக வலம் வந்தபோதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அமலாபால். ஆனால் இந்த திருமணம் மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அமலாபால், தொடர்ந்து பல்வேறு துணிச்சலான வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் ரிலீஸ் ஆன ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆடை படத்திற்கு பின் அவருக்கு தமிழில் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் படத் தயாரிப்பில் இறங்க முடிவு செய்த அமலாபால். கடந்த ஆண்டு ரிலீஸான கடாவர் என்கிற படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. தற்போது மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். அவரது கைவசம் 4 படங்கள் உள்ளன. இவ்வாறு பிசியான ஹீரோயினாக வலம் வரும் அவர், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... ஆசையை தூண்டிவிட்ட அஜித்.. துணிவுடன் பைக் ஓட்டி லைசன்ஸ் வாங்கிய மஞ்சு வாரியர்- அப்போ இனி அடிக்கடி பைக்ரைடு தான்
அந்த வகையில் தற்போது, நடிகை அமலா பாலை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் புது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார் அமலா பால்.
இந்த கோவிலுக்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோவில் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லையாம். கோவிலுக்கு எதிர்புறம் உள்ள சாலையில் நின்று தரிசனம் செய்யும்படி அங்குள்ளவர்கள் தன்னை வற்புறுத்தியதாக அமலாபால் குற்றம்சாட்டி உள்ளார்.
சாமி தரிசனம் செய்வதற்காக ஆசை ஆசையாய் வந்த நடிகை அமலா பால், தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த வேதனை அடைந்ததாக அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். 2023.ம் ஆண்டில் கூட மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்றும் இதுபோன்ற மத பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புவதாகவும் அந்த பதிவேட்டில் அமலா பால் எழுதியுள்ளார். மதத்தை காரணம் காட்டி நடிகை அமலா பால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... யார் அந்த மாமாகுட்டி?... லைவ் வீடியோவில் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்த நபர் - ஷாக் ஆன ரசிகர்கள்