நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள் அவர் மீண்டும் காதலித்து வருவதாக கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மனதில் மிகவும் பேமஸ் ஆனதற்கு முக்கியமான காரணம் ஓவியா தான். அந்நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கப்பட்ட போது, அதில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியா, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அவருக்காக சமூக வலைதளங்களில் ஆர்மியெல்லாம் தொடங்கி ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

பிக்பாஸ் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஓவியா, அதன்பின் அதனை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதன்காரணமாக அவர் தற்போது போதிய பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தன் சக போட்டியாளரான ஆரவ்வை காதலித்து வந்தார் ஓவியா. இருப்பினும் ஆரவ் அந்த காதலுக்கு நோ சொல்லிவிட்டார்.

இதையும் படியுங்கள்... தளபதி 67 அப்டேட்...! பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரபலம்

இந்நிலையில், தற்போது ஓவியா மீண்டும் காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட லைவ் வீடியோ தான். அதில் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஓவியாவை, திடீரென ஒருவர் பாய்ந்து வந்து முத்தமிடுகிறார். பின்னர் அந்த நபர் ஓவியாவை இருக்கமாக கட்டிப்பிடிக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

View post on Instagram

இந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இருவரும் காதலிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ ‘யார் அந்த மாமாகுட்டி' என ஓவியாவிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலர்களா அல்லது நண்பர்களா என்பது குறித்து ஓவியா விளக்கம் அளித்தால் தான் உண்மை தெரியவரும்.

இதையும் படியுங்கள்...வாரிசு vs துணிவு.... பொங்கல் விடுமுறை முடிவில் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்தது யார்? - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்