MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாரிசு vs துணிவு.... பொங்கல் விடுமுறை முடிவில் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்தது யார்? - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

வாரிசு vs துணிவு.... பொங்கல் விடுமுறை முடிவில் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்தது யார்? - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு படங்களில் பொங்கல் விடுமுறை முடிவில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 18 2023, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பொங்கல் பண்டிகை நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு படமும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே கடந்த ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் ஆனது. பொதுவாக அஜித் - விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் எந்த படத்துக்கு அதிக கலெக்‌ஷன் கிடைத்தது என்பதை தெரிந்துகொள்ள இருதரப்பு ரசிகர்களும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

24

அந்த வகையில், துணிவு - வாரிசு படங்களுக்கும் அதே நிலை தான் நீடித்தது. இரண்டு படங்களுமே முதல் நாளில் இருந்தே கலெக்‌ஷனை வாரிக் குவித்து வருகின்றன. அதுவும் கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த இரண்டு படங்களுமே வசூலை வாரிக்குவித்து உள்ளன. இதில் பொங்கல் விடுமுறை முடிவில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... தளபதி 67 அப்டேட்...! பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரபலம்

34

காணும் பொங்கல் தினமான நேற்று அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் உலகளவில் ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன்மூலம் கடந்த 7 நாட்களில் இப்படம் மொத்தமாக ரூ.175 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அஜித் படங்களுக்கு வெளிநாட்டில் பெரிதாக வரவேற்பு இருக்காது என்பதை துணிவு படம் தகர்த்தெறிந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளில் அஜித்தின் கெரியரில் அதிக கலெக்‌ஷனை குவித்த படமாக துணிவு மாறி உள்ளது.

44

மறுபுறம் விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று மட்டும் ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இப்படம் மொத்தமாக ரூ.190 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாம். விரைவில் 200 கோடி கிளப்பிலும் இணைய வாய்ப்புள்ளது. வெளிநாட்டிலும் வாரிசு திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. நேற்றுடன் பொங்கல் விடுமுறை முடிந்துவிட்டதால், இன்று துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களின் வசூலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஆவலோடு காத்திருந்த அமுதவாணன்.. அலேக்காக பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிய கதிரவன்- பிக்பாஸில் செம டுவிஸ்ட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved