MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'அலைபாயுதே' படத்தில் ஷாலினி - மாதவனுக்கு முன்பு நடிக்க இருந்த நடிகர்கள் யார் தெரியுமா?

'அலைபாயுதே' படத்தில் ஷாலினி - மாதவனுக்கு முன்பு நடிக்க இருந்த நடிகர்கள் யார் தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், 'அலைபாயுதே' படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ - ஹீரோயின் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 27 2025, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மணிரத்னம்:

மணிரத்னம்:

காதல் படங்களை தனக்கே உரிய பாணியில் இயக்கி, அதனை வெற்றி பெற வைப்பவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய அலைபாயுதே திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த, நடிகர் - நடிகை பற்றிய தகவலை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
'அலைபாயுதே' திரைப்படம்:

'அலைபாயுதே' திரைப்படம்:

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை எத்தனை காலமானாலும் மறக்க முடியாது. அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு, காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான 'அலைபாயுதே' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் படமாக தற்போது வரை உள்ளது.

அர்ஜுன் பட ஹீரோயின் ஹரிப்ரியாவுக்கு குழந்தை பிறந்தது!

36
ஏ.ஆர்.ரகுமான் இசை:

ஏ.ஆர்.ரகுமான் இசை:

இந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை இப்படத்திற்கு உயிர் நாடி போல் இருந்தது என கூறலாம். அதே போல் பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது.

46
மாதவன் ஹீரோவாக நடிக்க, ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார்

மாதவன் ஹீரோவாக நடிக்க, ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார்

இந்த படத்தில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடிக்க, ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜெயசுதா, சொர்ண மால்யா, விவேக், பிரமிட் நடராஜன், வேணு அரவிந்த், சுகுமாரி, அரவிந்த்சாமி, குஷ்பூ, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிராமத்தில் நடைபெறும் தன்னுடைய நண்பரின் திருமணத்திற்காக செல்லும் நாயகன் கார்த்திக், கதாநாயகி சக்தியை சந்திக்க நேர்கிறது. இருவரும் ரயிலில் பயணிக்கும் போது ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. பின்னர் காதலிக்க துவங்குகின்றனர். பல தடைகளை தாண்டி, இருவரும் வீட்டுக்கே தெரியாமல் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வாழும் நிலையில், இந்த தகவல் வெளியே வர வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

ரஜினி அப்படி பண்ணது உண்மை ; பட் பொண்ணு அவர் கொடுக்கல - தனுஷ் ஓபன் டாக்!

56
அலைபாயுதே வெளியாகி 25 வருடம்:

அலைபாயுதே வெளியாகி 25 வருடம்:

கார்த்திக் மீதான பொஸசிவ் சக்தி பல தருணங்களில் வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் சக்திக்கு விபத்து ஏற்பட, மீண்டும் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறாரார்கள் என்பது உணர்ச்சி போராட்டத்துடன் காட்சி படுத்தி இருப்பர் இயக்குனர் மணிரத்னம். இப்படம் வெளியாகி சுமார் 25 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த படத்தில் ஹீரோ - ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகர் பற்றி மணிரத்னம் கூறியுள்ளார். 

66
ஷாருக்கான் - கஜோல் நடிக்க வேண்டியது:

ஷாருக்கான் - கஜோல் நடிக்க வேண்டியது:

அலைபாயுதே படத்தின் கதையை முதலில் ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்கவே திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த கதை ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்திருந்தாலும், இந்த படத்தின் கிளைமேக்ஸ் எப்படி வரவேண்டும் என்பதை, நான் அப்போது உருவாக்கவில்லை. எனவே அலைபாயுதே திரைப்படத்தை எடுக்காமல் கஜோல் மற்றும் ஷாருக்கான் வைத்து 'தில் சே' படத்தை இயக்கினேன்.  இதன் பின்னரே அலைபாயுதே திரைப்படம் ஷாலினி மற்றும் மாதவனை வைத்து படமாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image2
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image3
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved