துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூலையும் 6 நாளில் அடிச்சுதூக்கிய ஷாருக்கானின் பதான்
பொங்கல் பண்டிகைக்கு ரிலீசான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் சேர்த்தே மொத்தமாக ரூ.500 கோடி மட்டுமே வசூலித்து இருந்தன.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள படம் பதான். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும், ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்திருந்த இப்படம் கடந்த ஜனவரி 25-ந் தேதி உலகமெங்கும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி முதல் நாளிலேயே பதான் திரைப்படம் ரூ.106 கோடி வசூலித்து இருந்தது. முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் பாலிவுட் படம் என்கிற சாதனையை இதன்மூலம் நிகழ்த்திக் காட்டியது. இதுதவிர அடுத்தடுத்து விடுமுறை நாட்களாக இருந்ததால் கடந்த 5 நாட்களாக பதான் படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்து வந்தது.
இதையும் படியுங்கள்... 2 ஹீரோயின்கள் உள்பட படக்குழுவினர் 180 பேருடன்... தனி விமானத்தில் காஷ்மீருக்கு பறந்த தளபதி 67 டீம்
அதன்படி இப்படம் ஐந்தே நாட்களில் ரூ.540 கோடி வசூலித்து இருந்தது. நேற்று வேலை நாளாக இருந்ததன் காரணமாக பதான் படத்தின் வசூல் சற்று சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதன்மூலம் இப்படம் ரிலீஸான ஆறே நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீசான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் சேர்த்தே மொத்தமாக ரூ.500 கோடி மட்டுமே வசூலித்துள்ள நிலையில், பதான் படம் ஆறே நாட்களில் அதனையெல்லாம் மிஞ்சி வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதே வேகத்தில் சென்றால் இப்படம் ரூ.1000 கோடி வசூலையும் எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த 'யாரடி நீ மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்ரா..!