- Home
- Cinema
- போட்டோகிராபர்களின் செயலால் டென்ஷன் ஆன சமந்தா... போஸ் கொடுக்காமல் கிளம்பிச்சென்ற சாகுந்தலம் நாயகி
போட்டோகிராபர்களின் செயலால் டென்ஷன் ஆன சமந்தா... போஸ் கொடுக்காமல் கிளம்பிச்சென்ற சாகுந்தலம் நாயகி
சாகுந்தலம் படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்றிருந்த நடிகை சமந்தா, அங்கு போட்டோகிராபர்களின் செயலால் டென்ஷன் ஆகிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடிகை சமந்தா, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது சாகுந்தலம் திரைப்படம் தயாராகி உள்ளது.
வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.
குணசேகரன் என்பவர் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இதனால் சாகுந்தலம் படத்தின் புரமோஷனில் பிசியாக உள்ள நடிகை சமந்தா, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... அஜித்தால் எந்த பிரச்சனையும் இல்ல... எல்லாம் அவர்களால் தான்! ஏகே 62 வாய்ப்பு பறிபோனது குறித்து விக்கி ஓபன் டாக்
அந்த வகையில் சாகுந்தலம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகை சமந்தாவை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் குவிந்தனர்.
சமந்தா வந்த போது போட்டோகிராபர்கள் பிளாஷ் போட்டு போட்டோ எடுக்க தொடங்கினர். இதனால் அப்செட் ஆன சமந்தா, கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
போட்டோகிராபர்களின் இந்த செயலை சமந்தாவின் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். இப்படி பிளாஷ் போட்டால் அவர் கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடாதா அவரும் மனிதர் தானே என திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் சோழர்களோடு மோதும் பாண்டியர்கள்... பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீசாகும் யாத்திசை