Neelima : உங்க உள்ளாடை சைஸ் என்ன... கொச்சையாக கேள்வி கேட்ட நபருக்கு செருப்படி பதில் அளித்த நடிகை நீலிமா
Neelima : இன்ஸ்டாகிராம் வாயிலாக ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்களுக்கு பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
கமல்ஹசனின் தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர் கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், ஜோதிகாவின் மொழி, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சினிமாவை விட இவர் சின்னத்திரையில் மிகவும் பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் நீலிமா. குறிப்பாக இவர் வில்லியாக நடித்த சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கோலங்கள், மெட்டி ஒலி, அரண்மனை கிளி போன்ற தொடர்களில் இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டன.
இதையும் படியுங்கள்.... பாதுகாப்பா இருந்தும் கொரோனா வந்திருச்சு... தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்
நடிப்பைத் தவிர்த்து தொகுப்பாளினியாகவும் அசத்தி உள்ளார் நீலிமா. இவ்வாறு பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வந்த நீலிமாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக தனக்கு வரும் ஆபாச மெசேஜ்களுக்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார் நீலிமா.
அதன்படி நெட்டிசன் ஒருவர், உங்க உள்ளாடை சைஸ் என்ன என கேட்டுள்ளார். இதற்கு, “நான் ஏன் உனக்கு சொல்ல வேண்டும். நீ விற்க போறியா?” என செருப்படி பதில் கொடுத்துள்ளார். மற்றொருவர் செக்ஸ் பற்றி கொச்சையான கேள்வியை கேட்டுள்ளார். இந்த முட்டாளுக்கு நான் எப்படி பதில் அளிப்பது என பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறு ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்களை நீலிமாவின் ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.... முதன்முறையாக காமெடி மன்னன் கவுண்டமணியுடன் இணையும் சிவகார்த்திகேயன் - எந்த படத்தில் தெரியுமா?