முதன்முறையாக காமெடி மன்னன் கவுண்டமணியுடன் இணையும் சிவகார்த்திகேயன் - எந்த படத்தில் தெரியுமா?
Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக கலக்கிய கவுண்டமணி தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பிரின்ஸ் திரைப்படம் தயாராகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது.
இதையடுத்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். அவர் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதில் தளபதி பட ரஜினி கெட் அப்பில் சிவகார்த்திகேயனின் தோற்றம் அமைந்திருந்தது.
இதையும் படியுங்கள்... ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதி ரொம்ப காஸ்ட்லி.. புஷ்பா 2-வில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா?
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மிஷ்கினும், சிவகார்த்திகேயனும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். வித்யு அய்யன்னா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் காமெடி மன்னன் கவுண்டமணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், காமெடி கலந்த வேடமாக இது இருக்கும் எனவும் கூறப்படுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... வணங்கான் நாயகி கிருத்தி ஷெட்டியின் அட்வைஸுடன் கூடிய ஹாட் போஸ் !