பாதுகாப்பா இருந்தும் கொரோனா வந்திருச்சு... தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்
varalaxmi sarathkumar : நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.
போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி. சரத்குமாரின் மகளான இவர், தந்தையை போலவே துணிச்சலான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் சண்டக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் வில்லி வேடங்களிலும் நடித்து ஆச்சர்யப்படுத்தினார் வரலட்சுமி.
சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இரவின் நிழல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. இதில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதி ரொம்ப காஸ்ட்லி.. புஷ்பா 2-வில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா?
நடிகை வரலட்சுமிக்கு தமிழைப்போல் தெலுங்கிலும் மவுசு அதிகரித்துள்ளது. அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதனால் ஐதராபாத்தில் தங்கி உள்ளார் வரலட்சுமி. சமீபத்தில் கூட வாரிசு படப்பிடிப்புக்காக ஐதராபாத் வந்திருந்த தனது தந்தையை சந்தித்து அவரது பிறந்தநாளையும் கொண்டாடி இருந்தார் வரலட்சுமி.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக இருந்தும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். மேலும் கொரோனா நம்மை விட்டு இன்னும் நீங்கவில்லை, தயவு செய்து மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக காமெடி மன்னன் கவுண்டமணியுடன் இணையும் சிவகார்த்திகேயன் - எந்த படத்தில் தெரியுமா?