ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இப்படி ஒரு கனெக்ஷனா...! சீக்ரெட் தகவலை வெளியிட்ட செல்வராகவன்
Selvaraghavan : பொன்னியின் செல்வனுக்கும், ஆயிரத்தில் ஒருவனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு ரிலீசான படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இப்படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். கார்த்தியுடன் ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
இன்று ரசிகர்களால் ஆஹா ஓஹோ என கொண்டாடப்படும் இப்படம் ரிலீசான சமயத்தில் படு தோல்வியை சந்தித்தது. இன்று ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு காரணமாக இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருகிறார் செல்வராகவன். அப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதில் கார்த்தி நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதையும் படியுங்கள்... யம்மாடியோ.. இந்த வருஷம் மட்டும் 50 படங்களா! கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் அந்த நடிகர் யார் தெரியுமா?
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தியிடம் வீடியோ வாயிலாக இயக்குனர் செல்வராகவன் சில கேள்விகளை கேட்டார். அதில் ஆயிரத்தில் ஒருவன் 2-வில் நடிப்பீர்களா என்கிற கேள்வியும் இடம்பெற்று இருந்தது. இதற்கு பதிலளித்த கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் தந்த வலியே இன்னும் ஆறவில்லை. அது ஆறிய பின்னர் யோசிப்போம் என பதிலளித்தார்.
மேலும் அந்த வீடியோவில் பொன்னியின் செல்வனுக்கும், ஆயிரத்தில் ஒருவனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றியும் பேசி இருந்தார் செல்வராகவன். அதன்படி ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர், பொன்னியின் செல்வனில் இடம்பெறும் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்து தான் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார் செல்வா. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மீண்டும் காதல் தோல்வியா..? யார் மேல இம்புட்டு கோபம்... நடிகை திரிஷா பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்