'போட்' படம் எப்படி இருக்கு... சிறப்பு காட்சியை பார்த்து விட்டு அறிக்கை மூலம் விமர்சனம் கூறிய சீமான்!
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு நடித்துள்ள 'போட்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை அறிக்கை மூலம் கூறியுள்ளார் சீமான்.
இந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளதாவது, "தமிழ் திரையுலகில் ஒரு புதிய முயற்சி! பிரபா பிரேம்குமார் அவர்களின் தயாரிப்பில், அன்புத்தம்பி சிம்பு தேவன் இயக்கி உள்ள 'போட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கண்டு களித்தேன். ஒரு சிறிய பெட்டிக்குள் விலை மதிக்க முடியாத புதையலை வைத்தது போல சிறிய படகு பயணத்திற்குள் ஏராளமான செய்திகளை சொல்லி உள்ளார் தம்பி சிம்பு தேவன். விறுவிறுப்பான திரை கதையும், அழுத்தமான வசனங்களும், 80 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
மீனவ மக்களின் கடினமான வாழ்க்கையையும், கடக்க முடியா வலியையும், நம் கண் முன் காட்சிகளாக விரிய செய்யும் கனமான கலை படைப்பு இத்திரைப்படம். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் மீனவராகவே வாழ்ந்து காட்டியுள்ள அன்பு தம்பி யோகி பாபு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
'தங்கலான்' இரண்டாவது சிங்கிள் அப்டேட்டுடன்... ஆடியோ லான்ச் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
அண்ணன் சின்னி ஜெயந்த், அண்ணன் எம் எஸ் பாஸ்கர், ஆசாம் தாஸ், மதுமிதா, கௌரி கிஷன், சாம்ஸ், ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவு படத்தோடு நம்மை பயணிக்க வைத்து. இறுதி காட்சி நெருங்க நெருங்க பதட்டமும் பரபரப்பும் தெறித்துக்கொள்ளும் அளவுக்கு படத்தோடு ஒன்றச்செய்கிறது.
தென்றல் தீண்டுவது போன்ற தம்பி ஜிப்ரனின் இசை மனதை இனிதாக்குகிறது. வழக்கமான திரைப்படங்கள் போல அல்லாமல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 35-ல் கடவுள், போன்று மீண்டும் ஒரு தனித்துவமான உணர்வுபூர்வமான கதைக்களத்தில் வியக்க வைத்துள்ளார் தம்பி சிம்புதேவன். கடலும் படகும் அதில் பயணிக்கும் சில மனிதர்களும் என்னும் குறுகிய வட்டத்திற்குள் சிறிதும் சலிப்பு தட்டாமல் இரண்டு மணி நேரம் கதை களத்திற்குள்ளேயே கட்டிப்போட்டு உள்ள சிம்பு தேவனின் கதை திறமைக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
அடக்கடவுளே தனுஷின் போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது இந்த பணத்தில் தானா? ஷாக் கொடுத்த பிரபலம்!
தென்றல் தீண்டுவது போன்ற தம்பி ஜிப்ரனின் இசை மனதை இனிதாக்குகிறது. வழக்கமான திரைப்படங்கள் போல அல்லாமல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 35-ல் கடவுள், போன்று மீண்டும் ஒரு தனித்துவமான உணர்வுபூர்வமான கதைக்களத்தில் வியக்க வைத்துள்ளார் தம்பி சிம்புதேவன். கடலும் படகும் அதில் பயணிக்கும் சில மனிதர்களும் என்னும் குறுகிய வட்டத்திற்குள் சிறிதும் சலிப்பு தட்டாமல் இரண்டு மணி நேரம் கதை களத்திற்குள்ளேயே கட்டிப்போட்டு உள்ள சிம்பு தேவனின் கதை திறமைக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
seeman
'போட்' திரைப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து நடிகர்களுக்கும், கலை இயக்குனர் ஐயப்பன் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் பணியாற்றி மறைந்த கலை இயக்குனர் சந்தானம் அவர்களுடைய திறமை மிகுந்த போற்றுதலுக்குரியது. நாளை வெளியாகும் போர்ட் திரைப்படத்தை உலகெங்கும் வாழும் என் பேரன்பிற்குரிய தமிழ் மக்கள் திரையுலகில் கண்டு களைத்து திரைப்படத்தினை மாபெரும் வெற்றி படைப்பாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தன்னுடைய அறிக்கை மூலம் இப்படத்தின் விமர்சனத்தையும் கூறி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான்.