நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.  

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டுடியோஸும், மற்றும் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள திரைப்படம், 'தங்கலான்'. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புதுமையான கதைக்களத்தில் இயக்கி உள்ளார். 

பழங்குடி மக்கள், ஆங்கிலேயர்களால் எப்படி தங்கம் எடுக்கும் பணிக்கு அடிமை படுத்தப்பட்டனர் என்பதே இப்படத்தின் மைய கதை என்பது இப்படத்தின் ட்ரைலர் மூலம் தெரிய வந்தது. நடிகர் சியான் விக்ரம் வழக்கம் போல் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்துள்ளார்.

அடக்கடவுளே தனுஷின் போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது இந்த பணத்தில் தானா? ஷாக் கொடுத்த பிரபலம்!

'தங்கலான்' படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மரியான் படத்திற்கு பின்னர் பார்வதியின் இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் கவனம் பெரும் என கூறப்படுகிறது. மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளளார். இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிள் குறித்த தகவலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

80-ஆவது வயதில் அடியெடுத்து வைத்த டெல்லி கணேஷுக்கு நடந்த சதாபிஷேகம்! மணக்கோலத்தில் இருக்கும் போட்டோஸ்!

அதன்படி நாளை, இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும்... 'தங்கலான்' பட ஆடியோ லான்ச் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கு, எப்போது என்கிற எந்த விவரத்தையும் படக்குழு அறிவிக்கவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் முழு விவரம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Scroll to load tweet…