80-ஆவது வயதில் அடியெடுத்து வைத்த டெல்லி கணேஷுக்கு நடந்த சதாபிஷேகம்! மணக்கோலத்தில் இருக்கும் போட்டோஸ்!
தமிழில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர், டெல்லி கணேஷின் சதாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்கிற ஊரில் உள்ள ஒரு கிராமத்தில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி 1944- ஆம் ஆண்டு பிறந்தவர் தான் கணேஷ். இவர் தக்ஷிண பாரத நாடக சபா என்கிற 'தில்லியை' சேர்ந்த நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தால், இவரின் பெயரை திரையுலகினர் தில்லி கணேஷ் என அழைக்க துவங்கினர்.
இந்திய வான்படையில் பத்து வருடங்கள் இவர் பணியாற்றி இருந்தாலும், இவருக்கு நடிப்பு மீதான ஈர்ப்பு மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை. 1974 ஆம் ஆண்டு இந்திய 'வான்படையில்' இருந்து வெளியேறிய பின்னர், 1977-ல் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான, பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானார்.
இந்தப் படத்தை தொடர்ந்து, மாரியம்மன் திருவிழா, ஒரு வீடு ஒரு உலககம், பசி, ஆடு பாம்பே, வெள்ளி ரதம், உறங்காத கண்கள், அதிசய ராகம், ராஜ பார்வை, என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, போன்ற பல படங்கள் இவரது சினிமா கேரியரில் மறக்க முடியாத படங்களாக உள்ளன.
மேலும் 1979 ஆம் ஆண்டு பசி திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதையும் வென்றார். அதேபோல் தமிழ்நாடு மாநில அரசின் கலைமணி விருதையும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார். தனக்கே உரிய பாணியில், ரசிகர்களை தன்னுடைய காமெடியாலும், உயிரோட்டமான நடிப்பாலும் கவர்ந்துள்ள நடிகர் டெல்லி கணேஷ், திரைப்படங்களை தவிர மர்ம தேசம், கஸ்தூரி, பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, வசந்தம், மனைவி, செல்லமே, வீட்டுக்கு வீடு டூட்டி, ஆஹா கல்யாணம், போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சரியா ஒரு வருஷம் ஆகிடுச்சு! மீண்டும் வீடு தேடி சென்று.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய KPY பாலா! வீடியோ!
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்கள் மற்றும் ஏராளமான இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ள இவர் இன்று தன்னுடைய 80-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை சிறப்பிக்கும் விதமாக, அவரின் குடும்பத்தினர் பிரமாண்டமாக சதாபிஷேகம் ஏற்பாடு செய்த நிலையில், இதில் டெல்லி கணேஷுக்கு நெருக்கமான பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில்... ரசிகர்கள் டெல்லி கணேஷுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். டெல்லி கணேஷை தொடர்ந்து இவருடைய மகன் மகாதேவன் கணேஷம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், அந்த படம் தோல்வி அடைந்ததால், தன்னுடைய பிஸ்னசை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
10 வயசுல பிரஷாந்த் செய்த குறும்புத்தனம்..! வீடே பத்திக்கிச்சு... ஃபயர் என்ஜினுக்கு போன் செய்த அம்மா!