- Home
- Cinema
- முதல்வன் படத்தில் வரும் ‘இந்த’ குட்டி ஸ்டிக்கருக்கு பின்னணியில் இப்படி ஒரு வரலாறே இருக்கா?
முதல்வன் படத்தில் வரும் ‘இந்த’ குட்டி ஸ்டிக்கருக்கு பின்னணியில் இப்படி ஒரு வரலாறே இருக்கா?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான முதல்வனின் இடம்பெற்ற புகார் பெட்டியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கருக்கு பின்னணியில் உள்ள வரலாறு பற்றி பார்க்கலாம்.

முதல்வன் பட சீக்ரெட்
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படம் 1999-ல் வெளியானது. சாமானியர் ஒருவர் முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை நேர்த்தியாகக் காட்டியிருப்பார் ஷங்கர். முதல்வன் படம் அர்ஜுனின் திரைவாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இக்கதையை ரஜினி, விஜய் நிராகரித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், படத்தில் பலரும் கவனிக்காத ஒரு விஷயம் உள்ளது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
முதல்வன் பட புகார் பெட்டி
முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒருநாள் முதல்வராவதுதான் முக்கியம். ரகுவரன் வாயடைக்கும் வகையில் அர்ஜுன் புகார் பெட்டி திட்டத்தைக் கொண்டு வருவார். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுதிப் போட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் பெட்டியில் லட்சக்கணக்கான புகார்கள் குவியும். அந்தப் பெட்டியில் ஒரு வரலாறு உள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம், அதில் உள்ள ஸ்டிக்கருக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு உள்ளது.
இதையும் படியுங்கள்... முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்கு காரணம் கலைஞரா? பல வருடங்களுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்
முதல்வன் படத்தின் அரிய தகவல்
சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் மனுநீதி சோழன் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். அவர் அரண்மனை வாசலில் ஒரு மணி கட்டி வைத்திருந்தார். யாருக்குக் குறை இருந்தாலும் மணியடித்தால், அரசர் அறை வரை சத்தம் கேட்கும். மணியோசை கேட்டதும் அரசர் வெளியே வந்து குறைகளைத் தீர்ப்பார். ஒருநாள் மணியோசை கேட்டு வந்த அரசருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு மாடு மணியை அடித்துக் கொண்டிருந்தது.
முதல்வன் படத்தில் ஒளிந்திருக்கும் குட்டி ஸ்டோரி
பின்னர் மன்னர் இது எதற்காக மணி அடிக்கிறது என விசாரித்தபோது தான். மன்னரின் மகன் தேரில் செல்லும்போது, அந்த மாட்டின் கன்றுக்குட்டி அதில் அடிபட்டு இறந்திருக்கிறது. தன் கன்றைக் கொன்றவனுக்குத் தண்டனை கேட்டுப் பசு மாடு மணியடித்தது அறிந்ததும் மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். பசுவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
ஸ்டிக்கருக்கு பின்னணியில் உள்ள வரலாறு
மன்னர் என்ன செய்வார் என்று பலரும் சந்தேகித்தனர். அமைச்சரிடம் மகனைக் கொல்ல உத்தரவிட்டார் மன்னர். இளவரசனைக் கொல்ல மனமில்லாத அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார். யாரும் தண்டனை கொடுக்க முன்வராததால், மன்னரே மகனைக் கொன்றார். இச்செய்தி தமிழ் இலக்கியங்களில் உள்ளது. மனுநீதி சோழன் கதையில் மணியடித்தால் அவர்களுக்கு நீதி கிடைக்கும். அதேபோல் முதல்வன் படத்தில் புகார் பெட்டியில் புகார் அளித்தால் நீதி கிடைக்கும் என்பதை ஸ்டிக்கர் மூலம் சூசகமாகச் சொல்லியிருக்கிறார் ஷங்கர்.
இதையும் படியுங்கள்... முதல்வன் படத்தின் திருப்புமுனை காட்சி; ஷூட்டிங் முடிந்ததும் அர்ஜுனை நெகிழ வைத்த ரகுவரன்!