முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்கு காரணம் கலைஞரா? பல வருடங்களுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்
ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் ரஜினிகாந்த் மிஸ் பண்ணியது ஏன் என்பது குறித்த சீக்ரெட் தகவல் வெளியாகி உள்ளது.
Mudhalvan
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் முதல்வன். இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு சாமானியன் ஒரு நாள் முதல்வர் ஆனார் என்ன நடக்கும் என்பதை தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தி இருப்பார் ஷங்கர். இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அமைந்திருந்தது.
Rajinikanth
இத்தகைய மாஸ் வெற்றியை ருசித்த முதல்வன் படத்தை விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் மிஸ் பண்ணிவிட்டார்கள். அதிலும் இப்படத்தை கதையை நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் எழுதி இருந்தாராம் ஷங்கர். ரஜினிக்கும் கதை மிகவும் பிடித்துப் போனாலும் அதில் அரசியல் இருப்பதால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததற்கான காரணமே வேறையாம்.
இதையும் படியுங்கள்... யாரும் சாப்பிடலையா... நிறுத்துடா Train-ன! விஜயகாந்தின் தக் லைஃப் சம்பவம்
Rajinikanth Rejected Mudhalvan Movie
நேற்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய திமுக அமைச்சர் எ.வ.வேலு, ரஜினிகாந்த் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு காரணமே கலைஞர் தான் என கூறினார். முதல்வன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தபோது கலைஞர் கருணாநிதி தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தாராம்.
Rajinikanth, Karunanidhi
பெரியவர் கருணாநிதி முதல்வராக இருக்கும் போது நான் முதல்வராக நடிப்பதா... முடியவே முடியாது என சொல்லி மறுத்துவிட்டாராம் ரஜினி. அந்த அளவுக்கு கலைஞர் கருணாநிதி மீது ரஜினிகாந்த் அன்பு வைத்திருந்ததாக அமைச்சர் எ.வ.வேலு அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒருவேளை ரஜினி முதல்வன் படத்தில் நடித்திருந்தால் அது மிகப்பெரிய பேசுபொருள் ஆகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒரு முறை கூட அமெரிக்கா போனதில்ல... ஆனாலும் நியூயார்க் நகரத்தை வர்ணித்து வாலி பாடல் எழுதியது எப்படி?