ஒரு முறை கூட அமெரிக்கா போனதில்ல... ஆனாலும் நியூயார்க் நகரத்தை வர்ணித்து வாலி பாடல் எழுதியது எப்படி?
பாடலாசிரியர் வாலி சில்லுனு ஒரு காதல் படத்துக்காக எழுதிய நியூயார்க் நகரம் பாடல் உருவான விதம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Lyricist Vaali
வாலிபக் கவிஞர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் வாலி. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே வாலியை சொல்லலாம். ஏராளமான ஹிட் பாடல்களை அவர் எழுதி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் எழுதிய பாடல்கள் பெரும்பாலும் ஹிட் அடித்துள்ளன. இந்த காம்போவில் உருவாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல் தான். இப்படம் கடந்த 2006-ம் ஆண்டு திரைக்கு வந்தது.
sillunu oru kadhal
சூர்யா ஹீரோவாக நடித்த இப்படத்தை ஒபிலி கிருஷ்ணா இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பூமிகா நடித்திருந்தனர். இப்படம் தான் சூர்யாவும், ஜோதிகாவும் கடைசியாக இணைந்து நடித்த படமாகும். இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதில் ஒரு பாடல் தான் நியூயார்க் நகரம் பாட்டு. இப்பாடல் உருவான விதம் பற்றி பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... கலெக்ஷன் அள்ளுது... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் வாழை - 2ம் நாள் நிலவரம் இதோ
Secret behind New york Nagaram song
சில்லுனு ஒரு காதல் படத்தின் கம்போஸிங்கின் போது வாலி முதலில் எழுதி முடித்த பாடல் முன்பே வா. அப்பாடலுக்கு ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் ட்யூன் போட்டிருக்க, அதற்கேற்க பாடல் வரிகளை எழுதி கொடுத்திருக்கிறார் வாலி. அடுத்ததாக அவர் எழுதிய பாடல், நியூயார்க் நகரம் பாடல். அதில், “நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்... தனிமை அடர்ந்தது... பனியும் படர்ந்தது; கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது” என சரணம் எழுதி இருப்பார் வாலி.
AR Rahman
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் ஒருமுறை கூட நியூயார்க் சென்றதில்லை, அவரிடம் பாஸ்போர்ட் கூட கிடையாது. அப்படி இருக்கையில் நியூயார்க்கில் கப்பல் ஓடுவதை தன் பாடல் வரிகளில் எப்படி எழுதி இருப்பார். அதற்கு உதவியது ஏ.ஆர்.ரகுமான் தானாம். நான் இதுவரை நியூயார்க்கே சென்றதில்லை அங்கு துறைமுகம் ஏதாச்சும் இருக்கா என்று வாலி கேட்க, ரகுமானும் இருக்கு சார் என சொன்னதும் “கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது” என்கிற வரியை எழுதினாராம் வாலி.
இதையும் படியுங்கள்... என்னது மூன்றாம் பாகமா? வெற்றிமாறனின் "விடுதலை" - இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!