கலெக்ஷன் அள்ளுது... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் வாழை - 2ம் நாள் நிலவரம் இதோ
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் வாழை திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
Vaazhai movie
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், அடுத்தடுத்து கர்ணன், மாமன்னன் என இரண்டு மாஸ் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானதோடு, தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராகவும் உயர்ந்தார். அவர் இயக்கத்தில் நான்காவதாக வெளியாகி இருக்கும் திரைப்படம் வாழை. இப்படத்தை தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கி உள்ளார் மாரி.
Vaazhai movie Mari Selvaraj
வாழை திரைப்படத்தின் மூலம் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 23-ந் தேதி சூரியின் கொட்டுக்காளி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்தனர்.
இதையும் படியுங்கள்... திமுக மூத்த உறுப்பினர்கள்.. செல்லமாக கலாய்த்த ரஜினிகாந்த் - ரசித்து சிரித்த முதல்வர்!
Vaazhai Movie Box Office
வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்துள்ளதோடு, வசூல் ரீதியாகவும் வாழை வேற லெவல் சாதனை படைத்து வருகிறது. அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே இப்படம் ரூ.1.3 கோடி வசூலித்து இருந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று முதல் நாளை விட டபுள் மடங்கு வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. அதன் வசூல் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
Vaazhai Movie Day 2 Box Office Collection
அதன்படி வாழை திரைப்படம் இரண்டாம் நாளில் ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளதாம். இதன்மூலம் இரண்டு நாள் முடிவில் அப்படம் ரூ.3.8 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் வாழை படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழை திரைப்படம் கம்மி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருவதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... "பின்னிட்ட போ" திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து மனதார பாராட்டிய மிஷ்கின் - ஏன்?