டூரிஸ்ட் பேமிலி இத்தனை கோடி வசூலா? தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Tourist Family Official Box Office Collection in Tamil : ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட டூரிஸ்ட் பேமிலி உலகளவில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டூரிஸ்ட் பேமிலி வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Tourist Family Official Box Office Collection in Tamil : பொதுவாக சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. நல்ல கதையம்சம் கொண்ட எந்த படமாக இருந்தாலும் சரி அந்த படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். அந்த படங்களுக்கு பட்ஜெட் எதுவும் முக்கியமில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் லப்பர் பந்து, டிராகன் ஆகிய படங்களை குறிப்பிடலாம். இந்தப் படங்களுக்கு பட்ஜெட் என்னவோ ரொம்பவே கம்மி தான். ஆனால், படங்களின் வசூல் கிட்டத்தட்ட ரூ.100 கோடி.
சசிகுமார், சிம்ரன் மூவி டூரிஸ்ட் பேமிலி
சூர்யாவின் கங்குவா கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். படத்தின் வசூல் ரூ.100 கோடி தான். இது சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக வலியை ஏற்படுத்திய படமாக கூட இருக்கும். அந்தளவிற்கு இந்தப் படம் விமர்சனங்களை எதிர்கொண்டது. இவ்வளவு ஏன் கடந்த மே 1 ஆம் தேதி சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த ரெட்ரோ படமும் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
ரெட்ரோ கலெக்ஷன், டூரிஸ்ட் பேமிலி
இருந்த போதிலும் ரெட்ரோ படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இந்தப் படத்திற்கு போட்டியாக வந்த சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் எளிமையான கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. யதார்த்தமான நடிப்பு, எளிமையான காட்சி அமைப்பு, எந்தவித ஆடம்பரமும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு படத்தின் ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது.
டூரிஸ்ட் பேமிலி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், ஸ்ரீஜா ரவி, கமலேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வந்தது. சீன் ரோல்டன் படத்திற்கு இசையமைத்திருந்தார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
ரூ.7 முதல் ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டூரிஸ்ட் பேமிலி படம் உலகளவில் ரூ.75 கோடி வசூல்குவித்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. சசிகுமார் மற்றும் சிம்ரனுக்கு இந்தப் படம் சிறந்த படமாக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.