MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கிய சமந்தாவின் சாகுந்தலம்... 2 நாளில் மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?

பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கிய சமந்தாவின் சாகுந்தலம்... 2 நாளில் மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?

குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 16 2023, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை சமந்தா, மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை அள்ளி வெற்றிவாகை சூடியது. இதையடுத்து அவர் நடித்த திரைப்படம் தான் சாகுந்தலம். இப்படத்தின் ரிலீசும் பல மாதங்களாக தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

24

இந்த நிலையில், இறுதியாக இப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் ஆனது. தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருந்த சாகுந்தலம் திரைப்படத்தை குணசேகரன் இயக்கி இருந்தார். நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்தை தில் ராஜு வெளியிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு அறிவிப்பு... இது 40 வருஷத்துக்கு முன் ரஜினி படத்துக்கு வச்ச பெயராச்சே..!

34

சாகுந்தலம் திரைப்படம் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருந்தார். இதுதவிர அருவி பட ஹீரோயின் அதிதி பாலன் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மணிசர்மா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். சாகுந்தலம் படத்தின் ரிலீசுக்கு முன் நடிகை சமந்தா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இப்படத்தை புரமோட் செய்ததால் இப்படத்தின் மீது எதிர்பாப்பும் அதிகரித்து இருந்தது.

44

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் சொதப்பலான திரைக்கதையின் காரணமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இப்படத்தின் வசூலும் செம்ம அடி வாங்கியது. முதல் நாளில் ரூ.5 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் அதில் 50 சதவீதம் கூட வசூலிக்கவில்லை. 2-ம் நாளில் இப்படம் வெறும் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இதேநிலை நீடித்தால் இப்படம் படுதோல்வியை சந்திக்கும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... கமலுக்காக சட்டைய கிழிச்சுட்டு சண்டைக்கு போவேன்... ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ் - வெறித்தனமான ரசிகரா இருக்காரே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved